முதலிரண்டு உலகக்கோப்பை போட்டிகளில் அபாரமாக ஆடி சாம்பியன் பட்டம் வென்ற மே.இ.தீவுகள் வலிமையான அணியாக உருவெடுத்தது. இதன் தொடர்ச்சியாக 3-ஆவது புருடென்ஷியல் உலகக் கோப்பை போட்டி ஜூன் 9 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இங்கிலாந்து, அணிகள் பங்கேற்றன. இதில் இரட்டை ரவுண்ட் ராபின் மே.இ.தீவுகள், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 மற்றும் நாக் அவுட் முறையில் போட்டி நடைபெற்றது. மொத்தம் 27 ஆட்டங்கள் நடைபெற்றன. 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை முற்றிலும் எதிர்பாராத விதமான முடிவுகளை அளித்தது. இதிலும் 60 ஓவர் அடிப்படையிலேயே போட்டி நடத்தப்பட்டது. 15 மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெற்றன. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. ஏ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இலங்கையும், பி பிரிவில் மே.இ.தீவுகள், ஆஸ்திரேலியா, இந்தியா, ஜிம்பாப்வே அணிகளும் இடம் பெற்றன. யாரும் எதிர்பாராத வகையில் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் ஆட்டத்தை பெருமை படுத்தும் வகையில் ஐசிசி க்ளாஸிக்ஸ் வீடியோவில் இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளை வென்ற தருணங்கள் 8 நிமிட விடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.






இந்த வீடியோவில் அந்த போட்டியில் கமென்டரி செய்தவர்கள் மற்றும் அதுகாரப்பூர்வ செய்தியாளர்களாக ஆட்டத்தை நேரில் பார்த்தவர்கள் பேசியிருக்கின்றனர். ஏ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தானும், பி பிரிவில் இந்தியா, மே.இ.தீவுகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதியில் இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்தியா இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மே.இ.தீவுகள். இறுதிச் சுற்றில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் முதலில் ஆடுமாறு இந்தியாவை பணித்தது. அப்போது உலகிலேயே சிறந்த வேகப்பந்து வீச்சைக் கொண்டிருந்தது மே.இ.தீவுகள். ஸ்ரீகாந்த் 38, அமர்நாத் 26 ரன்களை சேர்த்தனர்.



மே.இ.தீவுகளின் ஆன்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர், மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங் இந்தியாவை நிலைகுலையச் செய்தனர். 54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா. இதற்கிடையே பருவநிலை, பிட்ச் சூழ்நிலையை அருமையாக பயன்படுத்திக் கொண்ட இந்திய பவுலர்கள் அற்புதமான பந்துவீச்சில் மே..தீவுகள் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மதன்லால், அமர்நாத் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் 33 ரன்னில் இருக்கும்போது அடித்த ஷாட்டை 18 மீ தூரம் ஓடிச் சென்று அற்புதமாக கேட்ச் பிடிக்கிறார் கபில் தேவ். அமர்நாத் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இறுதியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்த அற்புதமான தருணங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ஹாட்ஸ்டாரில் இதனை திரைப்படமாக பதிவு செய்த 83 திரைப்படம் நேற்று இரவு வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது. இந்த படத்தில் ரன்வீர் சிங் கபில் தேவாகவும், தமிழ் நடிகர் ஜீவா ஸ்ரீகாந்தாகவும் நடித்திருக்கிறார்கள்.