ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் 9 நாள் வசூல் நிலவரங்களைப் பார்க்கலாம்.


லால் சலாம்


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படம் கடந்த பிப்ரவரி 9 ம் தேதி  திரையரங்குகளில் வெளியாகியது. ரஜினிகாந்த் கௌரவ கதாபாத்திரத்தில் நடிக்க விஷ்ணு விஷால், விக்ராந்த், ஆகியோர் இப்படத்தில் நாயகர்களாக நடித்துள்ளார்கள்.  உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் இப்படத்திற்கு வரவேற்பு அளித்தார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான  லால் சலாம் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகின. படத்தில் ரஜினியின் நடிப்பு சிறப்பாக அமைந்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தார்கள். சாதி, மத பேதங்கள் இல்லாமல் ஒற்றுமையை இப்படம் வலியுறுத்தியுள்ளது ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. 


இந்து - முஸ்லீம்களுக்கு இடையிலான சமத்துவத்தை வலியுறுத்தும் படமாக இருந்தாலும் படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு எற்கும் வகையில் இல்லாதது படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. ரஜினிகாந்த் நடித்துள்ள காட்சிகள் மாஸாக இருந்தாலும் விக்ராந்த் , மற்றும் கதாநாயகியாக நடித்த அனந்திகா சனில்குமார் போன்றவர்களுக்கு படத்தில் உறுதியான கதாபாத்திரங்கள் வழங்கப் படவில்லை என்பது பெரும்பாலாவர்களின் கருத்தாக வெளிப்பட்டுள்ளது. பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் சாக்னிக் தளம் வெளியிட்டுள்ள தகவலின் படி லால் சலாம் படத்தின் வசூல் நிலவரத்தைப் பார்க்கலாம்


லால் சலாம் முதல் நாள் வசூல்




லால் சலாம் படம் முதல் நாளில் இந்தியளவில் 3.55 கோடியும் இரண்டாவது நாளாக 3.25 மற்றும் மூன்றாவது நாளாக 3.15 கோடியும் வசூல் செய்தது.  இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் குறையத் தொடங்கியது. நான்காவது நாளாக 1.13 கோடிகளாக குறைந்த படத்தின் வசூல் அடுத்தடுத்த நாட்களில் சரிவை நோக்கிச் சென்றுள்ளது. 


 முதல் வாரத்தில் மொத்தம் 15. 08 கோடிகளை வசூல் செய்தது லால் சலாம் .  இந்நிலையில் 9 ஆவது நாளான நேற்று 39 லட்சம் படம் வசூல் செய்துள்ளது. இன்று 10 ஆவது நாளில்  17 லட்சம் வரை படம் வசூல் ஈட்டும் என்று இந்த தளத்தில் கூறப்பட்டுள்ளது.


லவ்வர்


லால் சலாம் படத்தின் வசூல் சரிவிற்கு மற்றுமொறு காரணம் மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் படம் மிகப்பெரிய வெற்றியும் தான். பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் , கெளரி பிரியா, கண்ணா ரவி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில்  நடித்துள்ளார்கள் , ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  மிகச்சிறிய பட்ஜெட்டில் எடுக்கப் பட்ட இந்தப் படம் 6 கோடிகளுக்கும் மேலாக முதல் வாரத்தில் வசூல் செய்தது. மேலும் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்தும் படத்திற்கு வரவேற்பு இருந்து வருகிறது. 




மேலும் படிக்க : Siragadikka Aasai: சிட்டி வைத்த ட்விஸ்ட்.. காரை விற்ற முத்து - சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ!


புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விமானப் பயணம்: குக் வித் கோமாளி மேடையில் சொன்னதை செய்த மைம் கோபி