சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.


முத்து கார் ஷெட்டுக்கு சென்று ”என்னடா எல்லாம் சோகமா இருக்கிங்க?” என்று தனது நண்பர்களிடம் கேட்கிறார். அதற்கு செல்வம், ”அந்த சிட்டி வந்துட்டு போனாண்டா” என்கிறார். ”ஏண்டா ஏதாவது வந்து பிரச்சனை பண்ணானா?” என முத்து கேட்கிறார். அதற்கு செல்வம் ”3 நாளுல நாங்க எல்லோரும் வாங்கின காச மொத்தம் கொடுக்கணுமாம் இல்லனா எல்லாக் காரையும் தூக்கிட்டு போய்டுவானாம்” என கூறுகிறார். முத்து சிட்டியின் அலுவலகத்துக்கு சென்று ”சண்டை என்கூட தான் பசங்கள விட்டுடு” என சொல்கிறார். அதற்கு சிட்டி ”என்ன எல்லோர் முன்னாடியும் அடிச்சி அவமானப்படுத்தின இல்ல அதுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம்” என்கிறார். ”என் கால்ல விழுந்து மன்னிப்பு கேளு உன் ஃப்ரண்டுங்க பக்கமே நான் வர மாட்டேன்” என்கிறார் சிட்டி. இதனையடுத்து சிட்டி கார் ஷெட்டுக்கே சென்று முத்து நண்பர்களின் காரை எடுக்க நிற்கிறார். அப்போது அங்கு வரும் முத்து, ”கார்த்தி இப்டி வா” என கூப்பிட்டு பணம் கொடுக்கிறார். அதை செல்வம் வீடியோ எடுத்துக் கொண்டு இருக்கிறார். ”ஏண்டா 3 4 லட்சம் இருக்கும் போல ஏதுடா இவ்வளவு காசு” என கேட்கிறார் செல்வம். பின் முத்து கெத்தாக நடந்து செல்கிறார். முத்து தனது காரை விற்றே இந்த பணத்தை கொடுத்ததாக தெரிகிறது. இத்துடன் ப்ரோமோ நிறைவடைகிறது.


தற்போது கதைக்களம் ரவுடி சிட்டியை மையமாக வைத்து நகர்கிறது. அடுத்த வரத்திற்கான ப்ரோமோவில் முத்து தனது காரை வேறு விற்றுள்ளார். இதனால் முத்து விஜயா முன்பு அவமானப்பட்டு நிற்பதை போன்று அடுத்த வார கதை இருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. 


சிறடிக்க ஆசை சீரியல் தொடங்கியது முதலே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதேப்போன்று எதார்த்தமான கதைக்களம் தான் இந்த சீரியலுக்கு ப்ளஸ் ஆக பார்க்கப்படுகிறது. பிள்ளைகளுக்குள் வேறுபாடு காட்டும் அம்மா, பண ஆசை பிடித்த மாமியாராக இந்த சீரியலில் வரும் விஜயா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். 


ஹீரோவின் அப்பாவாக வரும் சுந்தரராஜனும் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். நாயகி, நாயகன் என இந்த சீரியலில் வரும் அனைவருமே நடிப்பில் ஸ்கோர் செய்து வருகின்றனர். ஒரு குடும்பத்தில் நடக்கும் சின்ன விஷயங்கள் எப்படி விஷ்வரூபம் எடுக்கிறது என்பதையும் இந்த சீரியல் கதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 


மேலும் படிக்க 


Nawazuddin Siddiqui: ரஜினி படத்தில் வசனம் புரியாம நடிச்சேன்: சம்பளம் வாங்கியதால் குற்றவுணர்ச்சி: நவாசுதீன் சித்திக் கவலை!