Crime: வாங்கிய கடனை திருப்பி கேட்டதால் கொலை! ஆத்திரத்தில் காதலர்கள் செய்த செயல்.. நடந்தது என்ன?

வாங்கிய கடனை திருப்பி கேட்டதால்  காதலனுடன் சேர்ந்து கடன் கொடுத்த நபரை வீடு புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு நகையை திருடி சென்ற காதலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மன்மதன் (வயது 40) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  இவர் தேவதானபட்டி பகுதியில் ஜோதிடம் பார்ப்பது, மாட்டு தீவனம் விற்பனை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தேவதானப்பட்டி அருகே உள்ள நல்ல கருப்பன் பட்டியை சேர்ந்த ஜெய தீபா (வயது 40) என்ற பெண் தேவதானப்பட்டி பகுதியில்  இயங்கி வரும் எல்ஐசி நிறுவனத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார்.

Continues below advertisement


ஜெய தீபா  மன்மதனிடம் 30,000 ரூபாய் கடன் பெற்றதாகவும், பெற்ற கடனை திருப்பி கேட்டு பல முறை தொந்தரவு செய்ததாக கூறப்படும் நிலையில், ஜெய தீபா அவரது கள்ளக்காதலனான  தேவதானப்பட்டி தெற்கு தெருவைச்சேர்ந்த  முத்துமணி (வயது 30) இருவரும் சேர்ந்து நேற்று பிற்பகலில் வீட்டில் தனியாக இருந்த மன்மதனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு  அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் நகையை திருடி சென்று பெரியகுளத்தில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்ததுள்ளார்.


இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் மன்மதனின் தாய் நேற்றிரவு  9 மணி அளவில்  தனது மகனின் வீட்டிற்கு வந்தபோது பார்த்த போது மகன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடப்பதை பார்த்து தேவதானப்பட்டி காவல்துறையிணருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில், காவல்துறையினர்  கொலை செய்யப்பட்டு இறந்த மன்மதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


இதனைத் தொடர்ந்து கொலையான மன்மதனின் வீட்டின் தெரு பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது, சந்தேகிக்கும்படியாக வந்த ஜெய தீபா மற்றும் அவரது கள்ளக்காதலன் முத்துமணியை  விசாரணை செய்ததில் இருவரும் சேர்ந்து மன்மதனை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும், கொடுத்த கடனை கேட்டு அடிக்கடி அந்தப் பெண்ணை தொந்தரவு செய்ததால் கொலை செய்ததாகவும், மேலும் அவர் அணிந்திருந்த நகையை திருடி சென்றதாகவும்  விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் கொலை செய்த இருவரையும் தேவதானப்பட்டி காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும் இக்கொலை சம்பவம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில்  எதிரே உள்ள தெருவில்  பகலில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola