வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி2 நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் மாதம் வெளியாகும் என்ற தகவல் கசிந்துள்ளது.


சந்திரமுகி


2005ம் ஆண்டு ரஜினி, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்ட படத்திற்கு நல்ல விமர்சனம் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. காமெடி, ஆக்‌ஷன், பாடல், கதை, த்ரில்லர் என அனைத்திலும் ஸ்கோர் செய்த சந்திரமுகி படம் எவர்கிரீன் படமாக இருந்து வருகிறது. 


சந்திரமுகி 2


இந்த நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரமுகி 2 படம் தற்போது ரிலீசாகியுள்ளது. பி. வாசு இயக்கியுள்ள சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கங்கனா ரனாவத், லஷ்மி மேனன், மகிமா நம்பியார், ராதிகா, வடிவேலு என பலர் நடித்துள்ளனர். இதில் சந்திரமுகியாக கங்கனா நடித்து அசத்தியுள்ளார். படம் ரிலீசாவதற்கு முன்பாக வெளியான பாடலும், கிளிம்ப்ஸ் வீடியோக்களும் நல்ல வரவேற்பை பெற்றன. 


பணக்கார குடும்பம் ஒன்று, தொடர்ந்து பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அக்குடும்பத்தின் பிரச்சினைக்கு குல தெய்வ வழிபாடு ஒன்றே தீர்வு என கூறுகிறார் குருஜி ஒருவர். இதனால் அந்த குடும்பம் அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறது. இவர்களுடன் இரத்த சம்பந்தம் இல்லாத பாண்டியனும் (ராகவா லாரன்ஸ்) உடன் வருகிறார். அந்த ஊரில் உள்ள வேட்டையாபுரம் அரண்மனையில் தங்குகின்றனர். அங்கு அவர்கள் சந்திக்கும் அமானுஷ்ய நிகழ்வுகளுக்கு தீர்வு கிடைக்கிறதா என்பதே சந்திரமுகி 2 படத்தின் க்ளைமாக்ஸ்.


சந்திரமுகி2 படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 28ம் தேதி சந்திரமுகி 2 ரிலீசானது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் பெற்றிருந்தாலும் படம்  நல்ல வசூலை எடுத்ததாக கூறப்பட்டது. எனினும் முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகம் இல்லை என்பது பலரின் கருத்தாக இருக்கிறது . இந்த சூழலில் சந்திரமுகி2  படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


ஓடிடி ரிலீஸ்






 இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 26 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. 




மேலும் படிக்க : Anurag Kashyap: லியோ மூலம் இயக்குநர் அனுராக் கஷ்யப் ஆசையை நிறைவேற்றிய லோகேஷ் கனகராஜ்


”ஏன் நீ இப்படி செய்தாய்...?” - விக்ரம் படத்திற்காக லியோ தயாரிப்பாளர் லலித்குமாரை திட்டிய விஜய்..! நடந்தது என்ன?