Chandramukhi 2 Trailer: 200 வருட பகை.. வெளியே வந்த பாம்பு.. மிரட்டும் வேட்டையன் ராஜா.. சந்திரமுகி 2 டிரெய்லர் ரிலீஸ்..!

'ராஜாதி ராஜ.....ராஜ கம்பீர.....ராஜ மார்த்தாண்ட....ராஜ குலத்திலக வேட்டையன் ராஜா வரார்...வரார்..' என மிரட்டலாக சந்திரமுகி 2 ட்ரெயிலர் ரிலீசாகி உள்ளது.

Continues below advertisement

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே சந்திரமுகி 2 டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

பி.வாசு இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் 2005ம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. நாசர், ஜோதிகா, வடிவேலு, பிரபு, நயன்தாரா என ஏராளமான நடிகர்கள் நடித்த சந்திரமுகி 800 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. பேய் கதையாக இருந்தாலும், படத்தில் காமெடி, பாடல், த்ரில்லர் என அனைத்தையும் கொடுத்து ஒட்டுமொத்தமாக ரசிக்க வைத்திருந்தார் பி.வாசு. பிரமாண்டமும், ஒளிப்பதிவும், காமெடிகளும் கிட்ஸ் பேவரைட் மூவியாக சந்திரமுகி இருந்தது. படத்தில் வடிவேலு, ரஜினி காமெடி காம்பினேஷனும், கங்காவாகவும், சந்திரமுகியாகவும் மிரட்டிய ஜோதிகாவும் கைத்தட்டல்களை பெற்றனர். 

இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரமுகி 2 படம் எடுக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் 15ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் சந்திரமுகி 2 படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ராஜாதி ராஜ.....ராஜ கம்பீர.....ராஜ மார்த்தாண்ட....ராஜ குலத்திலக வேட்டையன் ராஜா வரார்...வரார்...என வசனத்துடன் தொடங்கும் டிரெய்லரில் 17 வருடத்திற்கு பிறகு மீண்டும் ரிபீட்டு ஆகும் ரா...ரா....என மிரட்சியுடன் கூறுகிறார் வடிவேலு. சந்திரமுகியாக கங்கனா ரனாவத்தும், வேட்டையன் ராஜாவாக ராகவா லாரன்ஸும் வரும் காட்சிகள் பிரமிப்பை காட்டுகின்றன. முதல் பாகத்தில் வெளியேறிய மிகப்பெரிய ராஜநாகம், இரண்டாம் பகுதியின் தொடக்கமாக உள்ளது. 

எனினும், முதல் பாகத்தை போன்ற பிரமாண்டமும், அதற்கு இருந்த அந்த த்ரில்லர் காட்சிகளும் இதில் இடம்பெறுமா என்ற சந்தேகம் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். படத்திற்கு கீரவாணியின் இசை பலத்தை சேர்க்கிறது. 200 ஆண்டுகளில் பகையை தீர்த்து கொள்வாரா சந்திரமுகி என்பதை காண வரும் 15ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். 

சந்திரமுகி2 டிரெய்லர் இதோ...

மேலும் படிக்க: Iraivan Trailer: ஒன் டூ த்ரீ.. முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் சைக்கோ த்ரில்லர்.. ஜெயம் ரவியின் ‘இறைவன்’ ட்ரெய்லர் வெளியீடு!

Entertainment Headlines Sep 03: சந்திரமுகி 2 டிரெய்லர் ரிலீஸ்.. 'குஷி' படத்தின் வசூல் நிலவரம்... இன்றைய சினிமா செய்திகள் இதோ..!

 

Continues below advertisement
Sponsored Links by Taboola