இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சி.எஸ்.கே. அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனுமாகியவர் தோனி. ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்டவர் எம்.எஸ்.தோனி. இவர் ரிஷிகேஷியில் உதனது மனைவி சாக்ஷியுடன் சென்றுள்ளார்.
ஆட்டம் போட்ட தோனி:
அங்கு இரவு நேரத்தில் பழங்குடியின மக்களைச் சந்தித்தார் தோனி. அப்போது, அவர்களுடன் இணைந்து தோனி பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்தை ஆடினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனியுடன் இணைந்து தோனியின் மனைவி சாக்ஷியும் நடனம் ஆடுகிறார். தோனியின் ரசிகர்கள் தற்போது இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து 2020ம் ஆண்டு ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். அதன்பின்பு, அவர் ஐ.பி.எல். தொடரில் மட்டும் ஆடி வருகிறார். ஐபிஎல் தொடரில் தோனியின் பேட்டிங்கைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் சி.எஸ்.கே. போட்டியை காண குவிந்து வருகின்றனர்.
ஐ.பி.எல். தொடருக்காக காத்திருப்பு:
அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரே தோனி ஆடும் கடைசி தொடராக இருக்கும் என்று கருதப்படுகிறது. 44 வயதான தோனியை கோப்பையுடன் வழியனுப்ப வேண்டும் என்று சி.எஸ்.கே. வீரர்களும், ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர். இந்த சீசனில் uncapped வீரராக தோனி களமிறங்க உள்ளார்.
தோனி இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, 50 ஓவர் உலகக்கோப்பை ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
தோனி இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 144 இன்னிங்சில் பேட் செய்து 6 சதங்கள் 1 இரட்டை சதங்கள் 33 அரைசதங்களுடன் 4 ஆயிரத்து 876 ரன்கள் எடுத்துள்ளார். 350 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10 சதங்கள் 73 அரைசதங்களுடன் 10 ஆயிரத்து 773 ரன்கள் எடுத்துள்ளார். 98 டி20 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 1617 ரன்கள் எடுத்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் தோனி 264 போட்டிகளில் ஆடி 24 அரைசதங்களுடன் 5 ஆயிரத்து 243 ரன்கள் எடுத்துள்ளார்.