ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எந்த இடத்திலும் விளையாட தயாராக இருப்பதாக கே.எல் ராகுல் தெரிவித்துள்ளார். 


அடிலெய்டு டெஸ்ட்: 


இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் பகல் இரவு போட்டியாக நடைப்பெறவுள்ளது . இதற்காக இரு அணிகளும் பிங்க் நிற பந்தில் தீவிர வலைப்பயிற்சி மேற்க்கொண்டு வருகின்றனர். 


கே.எல் ராகுல்:


முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா இல்லாத நிலையில் ராகுல் தொடக்க ஆட்டக்காராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்ஸ்சில் 26 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸ்சில் 77 ரன்களும் அடித்து இருந்தார். மேலும் இரண்டாவது இன்னிங்ஸ்சில் யஷ்யஸ்வி ஜெய்ஸ்வால்லுடன் இணைந்து அமைத்து 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கே.எல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்கிற கருத்தை ரசிகர்கள் எடுத்து வைத்தனர்.


Watch Video: ”ஓ நண்பனே நண்பனே!” கட்டியணைத்த சச்சின்.. உணர்ச்சிவசப்பட்ட காம்ப்ளி


ரோகித் வருகை:


இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் களமிறங்குவதால் கே.எல் ராகுல் மீண்டும் மிடில் ஆர்டரில் விளையாட வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஏற்கெனவே ராகுலுக்கு இந்திய அணியில் நிலையான் ஒரு பேட்டிங் இடம் கொடுக்கவில்லை என்கிற விமர்சனம் எழுந்து வருகிறது. இந்த நிலையில் ராகுல் தனது பேட்டிங் ஆர்டர் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். 


ராகுல் விளக்கம்: 


"நான் முதலில் விளையாடும் XI இல் இருக்க விரும்புகிறேன், களத்திற்கு சென்று பேட்டிங் செய்து அணிக்காக விளையாட விரும்புகிறேன். நான் களத்தில் சென்று எந்த  சூழ்நிலையிலும் ரன்களை எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கிறேன். அதிர்ஷ்டவசமாக நான் வெவ்வேறு நிலைகளில் பேட்டிங் செய்துள்ளேன். ஆரம்பத்தில், நான் அந்த முதல் 20-25 பந்துகளை எப்படி விளையாடுவது என்பது ஒரு சவாலாக இருந்தது. ஆனால் நான் வெவ்வேறு இடங்களில்  விளையாடிய அனுபவத்தால் பேட்டிங் செய்ய எளிதானது" என்று ராகுல் கூறி இருந்தார்.






பெர்த் டெஸ்ட் போட்டியில் நான் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளதாக இந்திய அணி நிர்வாகம் முன்பே தன்னிடம் கூறியதாக ராகுல் கூறினார்.


"நான் ஓபனிங் செய்வேன் என்று எனக்கு முன்பே கூறப்பட்டது. நான் முழு நியூசிலாந்து தொடரிலும் விளையாடவில்லை, இன்னிங்ஸைத் தொடங்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எனக்கு முன்பே கூறப்பட்டது. எனக்கு தயாராக போதுமான நேரம் கிடைத்தது. அதனால் நான் எப்படி ரன்களை எடுக்கப் போகிறேன், என்னென்ன செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று எனக்குத் தெரியும்," என்று ராகுல் கூறினார்.