புஷ்பா -2 (Pushpa 2: The Rule) திரைப்படம் திரையரங்கில் வெளியாவதற்கு முன்னே பாக்ஸ் -ஆபிஸ் ஹிட் பதிவு செய்துள்ளது. இந்தி மார்க்கெட்டில் 10 மணி நேரத்தில் 55 ஆயிரம் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புஷ்பா - 2 தி ரூல்:
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரரான அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் டிசம்பர்-5 ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. புஷ்பா படத்தின் முதல் பாகத்திற்கு தனியே ரசிகர் பட்டாளமே உண்டு. ரசிகர்கள் புஷ்பா -2 திரைப்படம் வெளியாகும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைக்கும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் வெளியாவதற்கு முன்னரே டிக்கெட் புக்கிங்கில் சாதனை படைத்துள்ளது.
புஷ்பா 2 இந்தி சினிமா:
புஷபா -2 திரைப்படம் உலகெங்கிலும் 12 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. PVR Inox and Cinepolis சார்ந்த திரையங்குகளில் டிக்கெட் புக்கிங் தொடங்கிய 10 மணி நேரத்திற்குள் சுமார் 55 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இந்தி சினிமா வரலாற்றில் ஒரு திரைப்படத்திற்கு அதி விரைவாக டிக்கெட் புக் ஆகியுள்ளது இந்தப் படத்திற்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் புக்கிங்கில் அனிமல், Gadar 2 ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளி புஷ்பா -2 தி ரூல் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. இந்திய அளவில் புதன்கிழமைக்குள் (04.12.2024) சுமார் 5 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகலம என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 6 லட்சம் என்ற எண்ணிக்கையை தொடும் எனில், ஏழு ஆண்டுகளுக்கு முன் பாகுபலி -2 படத்தின் சாதனையை முறியடிக்கும். பாகுபலி 2 வெளியான 2027 ஆண்டில், படத்திற்கு 6.5 லட்சம் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான பல திரைகளை கொண்ட திரையரங்குகளில் இந்த நிலை என்றால், ஒரு திரை மட்டுமே இருக்கும் திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டது. டிக்கெட் விற்பனை தொடங்கிய 12 மணி நேரத்திற்குள் MovieMax திரையரங்கில் 4 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவின் டிசம்பர் 4-ம் தேதி சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி:
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. டிச. 4 ஆம் தேதி இரவு 9.30 மணியிலிருந்தே தெலங்கானாவில் புஷ்பா- 2 திரையிடப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் டிசம்பர் 5-ம்தேதி காலை 1 மணி, 4 மணிக்கும் சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விலையாக ரூ.1,120 - 1,240 வரை உயர்த்தவும் அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது . புஷ்பா - 2 திரைப்படம் 3 மணிநேரம் 21 நிமிடங்கள் திரைநேரம் ஆக உள்ளது.
ரூ. 3000 டிக்கெட் விலை:
புஷ்பா - 2 திரைப்படத்திற்கு மும்பையிலுள்ள பிவிஆர் சினிமாஸ் திரையரங்கில் புஷ்பா - 2 முதல் நாளுக்கான ஒரு டிக்கெட் விலை ரூ. 3,000 ஆக நிர்ணயம் செய்துள்ளனர். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை வெளியான இந்திய திரைப்படங்களிலே அதிக டிக்கெட் விலை என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு, முன்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் டிக்கெட் விலை ரூ. 1000, ரூ.1600, ரூ.1800, ரூ.3000 என விற்பனை செய்வது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தெலங்கானா,ஆந்திர மாநில அரசு டிக்கெட் விலை உயர்வுக்கு அனுமதி வழங்கிவிட்டனர். டிசம்பர் 5-ம் தெதி முதல் டிசம்பர் 9-ம் தேதி வரை உயர்த்தப்பட்ட விலையில் டிக்கெட் விற்பனையை எதிர்பார்க்கலாம். 2898 AD, சலார், தேவரா உள்ளிட்ட படங்களிம் டிக்கெட் விலை ரூ.395 முதல் ரூ. 495 வரையில் மட்டுமே இருந்தது.
ரசிகர்கள் எதிர்பார்த்த ட்ரெய்லர்:
புஷ்பா படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். ஃபகத் ஃபாசில் புஷ்பா-2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் வெளியிடுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் பல மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இசையமைப்பாளர் தேவிஶ்ரீ பிரசாத் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
தேவி ஸ்ரீ பிரசாத் உடன், புஷ்பா-2 படத்தில் தமன் பின்னணி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் முதல் பாகத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதேபோலவே, புஷ்பா -2 படத்தில் ஶ்ரீலீலா கேமியோ செய்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
புஷ்பா -2 ரிலீஸ் தேதி:
புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓடிடி உரிமை:
புஷ்பா- 2 படத்திற்கான ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸில் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதன் மதிப்பு மட்டும் ரூபாய் 270 கோடி ரூபாய் அளவிற்கு என்று கூறப்படுகிறது.
புஷ்பா படம் திரையரங்கில் வெளியிடுவதற்கான வர்த்தகம் மட்டும் தற்போது வரை ரூபாய் 650 கோடி வரை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூபாய் 500 கோடி பட்ஜெட்டில் புஷ்பா 2 படம் உருவாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புஷ்பா - 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இப்படி டிக்கெட் விலையைக் கடுமையாக உயர்த்தியது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். தமிழ்நாடு, சென்னை, கொச்சி உள்ளிட்ட பிற நகரங்களில் இன்னும் டிக்கெட் புக்கிங் தொடங்கப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.