நடிகர் சந்தானத்தின் “குலுகுலு” திரைப்படத்தை வாழ்த்தி நடுக்கடலில் பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாட்டம். சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில், மேயாத மான் படப்புகழ் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”. நகைச்சுவை நடிகராக நடித்து வந்த நடிகர் சந்தானம் கதையின் பிரதான நாயகனாக இப்போது நடித்து வருகிறார். 'குலுகுலு' திரைப்படம் ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் எனத்தெரிகிறது. சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் எஸ். ராஜ் நாராயணன் தயாரித்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இந்தப் படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது. வரும் 29ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் நடுக்கடலில் நடிகர் சந்தானத்திற்கு பேனர் வைத்து ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர்.
Chess Olympiad 2022 LIVE: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வீரர்கள் பேருந்தில் பயணம்..
புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கடற்கரை சாலையில் தற்போதுள்ள காந்தி சிலைக்கு பின்புறம் ரயில் பாலம் இருந்தது. கால போக்கில் பாலம் உடைந்து வெறும் இரும்பு தூண்கள் மட்டுமே கடலில் காட்சி அளிக்கிறது. இதனை விளம்பரம் வைக்கும் இடமாக அரசியல் தொண்டர்களும், திரைப்பட நடிகர்களின் ரசிகர்களும் மாற்றி விட்டனர். தனுஷ், விஜய், அஜித் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு நடுக்கடலில் பேனர் வைத்து அவர்களது அட்ராசிட்டி காட்டுவது வழக்கம். இந்த நிலையில் நடிகர் சந்தானத்தின் புதிய திரைப்படத்தை வாழ்த்தி நடுக்கடலில் பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் மகிழ்ந்தனர்.
11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்