Leo: விஜய் நடிப்பில் திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் லியோ படத்தை, திரையரங்கிற்கு சென்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பார்த்துள்ளார். 

 

கைதி, விக்ரம், மாஸ்டர் என தொடர்ந்து கமர்ஷியல் படங்களை கொடுத்து வெற்றி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், விஜய் நடித்த லியோ படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் மீண்டும் இணைந்ததால் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. 

 

விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, இந்தி நடிகர் சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் என பலர் இணைந்து நடித்துள்ளனர். படம் ரிலீஸ்க்கு முன்பாக வெளியான கிளிம்ப்ஸ் புகைப்படங்கள், பாடல், டீசர், டிரெய்லர் என ஒவ்வொன்றும் படத்தை பற்றி அதிகமாகவே ரசிகர்களை பேச வைத்தது. இந்த நிலையில், கடந்த 19ம் தேதி உலளவில் லியோ படம் வெளியாகியது. முதல் நாளை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர். 

 

லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், பாக்ஸ் ஆபீசில் வசூலை குவித்து வருகிறது. அண்மையில் சென்னையில் கோலாகலமாக லியோ வெற்றி விழா நடைபெற்றது. இந்த நிலையில் லியோ படத்தை புதுச்சேரில் முதலமைச்சர் ரங்கசாமி திரையரங்கிற்கு சென்று பார்த்து ரசித்துள்ளார். முதலமைச்சர் ரங்கசாமி லியோ படத்தை பார்த்து ரசிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

முன்னதாக லியோ படம் ரிலீசான 12வது நாளில் பாக்ஸ் ஆபிசில் ரூ. 500 கோடியை தாண்டியதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் கிரீன் ஸ்டுடியோஸ் அறிவித்திருந்தது. லியோ படம் வெளியாகி 25 நாட்கள் ஆனநிலையில், செவன் ஸ்கிரீன்ரீன்ஸ் ஸ்டுடியோ சாதனை போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், இண்டஸ்ட்ரி பிளாக்பஸ்டர் லியோ தான் என்றும் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படங்களின் முதல் வரிசையில் லியோ இடம் பிடித்து விட்டது என்றும், 100 கோடி ஷேரை தமிழ்நாட்டில் லியோ பெற்றுள்ளது என்றும் இலங்கை, இங்கிலாந்து, கேரளா உள்ளிட்ட இடங்களில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படம் லியோ தான் என்றும் பெருமையுடன் அறிவித்திருந்தது.