தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே 5 நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவு எடுக்கப்பட்ட நிலையில், மேலும் 14 நடிகர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  சம்மந்தப்பட்ட நடிகர்கள் விளக்கம் அளிக்கச் சொல்லி தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


ரெட் கார்டு:


தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடிகர்கள் எஸ் .ஜே. சூர்யா, சிம்பு,யோகிபாபு,அதர்வா, விஷால் என ஏற்கனவே 5 நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தனுஷ், அமலாபால், ராய்லட்சுமி உள்ளிட்ட மொத்தம் 14 நடிகர்கர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு கொடுக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தகுந்த பதிலளிக்க வேண்டுமென்று சம்மந்தப்பட்ட நடிகர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் நடிகர் தனுஷ் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் படம் நடிக்க இருந்த நிலையில் தற்போது அந்த படம் 4 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் இருப்பதால் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


பெரும் சிக்கல்:


தமிழ் சினிமாவில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டால் அது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், அவர்களின் திரைவாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் 5 நடிகர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாக வெளியான தகவல் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது.


அதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவெடுத்தாக கூறப்பட்டதுடன், 5 நடிகர்கள் பெயரும் வெளியானது. அதன் அதிர்வலை அடங்குவதற்குள் தற்போது மேலும் 14 நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க 


GST Collection: அம்மாடியோவ்.. ஜூன் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வருவாய் இவ்வளவா..? தமிழ்நாடு 4வது இடம்..!


Odisha Train Accident: ஒடிசா கோர ரயில் விபத்து; விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது - கறாராகச் சொன்ன ரயில்வே