பாலசோர் டிரிபிள் ரயில் விபத்து தொடர்பான CRS விசாரணை அறிக்கையை ரயில்வே வெளியிடாது, மூத்த அதிகாரிகள் ஊடகங்களிடம் கூறியுள்ளது.


ஒடிசா ரயில் விபத்து:


விபத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ரயில்வே சார்பில் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், சிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்பு துறை மற்றும் பணியில் இருந்த அதிகாரிகளின் தவறுகளால் விபத்து ஏற்பட்டது என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையம் (CRS) தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. 


ஆதாரங்களின்படி, ரயில் இயக்கங்களுக்கான நிலையான இயக்க நடைமுறையை அதிகாரிகள் பின்பற்றத் தவறிவிட்டனர் எனவும் கூறப்படுகிறது. 


அறிக்கை வெளியிட மாட்டோம்:


விசாரணை அறிக்கை வெளியிடப்படாததற்கு,"சிபிஐ விசாரணை நடந்து கொண்டிருப்பதால், CRS அறிக்கை குறித்து நாங்கள் எதையும் வெளியிட மாட்டோம். இந்த அறிக்கை மற்ற அறிக்கையை எந்த வகையிலும் பாதிக்கவோ அல்லது தலையிடவோ கூடாது என்பதை உறுதிசெய்வதற்காகத்தான் ரயில்வே இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. 


மேலும் ரயில்வே தரப்பில், இரண்டு அறிக்கைகளையும் கவனத்தில் கொண்டு ஒரு அறிக்கையை உருவாக்குவோம். சம்பவத்தை ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்து, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்" என்று மூத்த அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.


விபத்து குறித்து விசாரணை நடத்திய தென்கிழக்கு வட்ட சிஆர்எஸ் ஏஎம் சவுத்ரி, கடந்த வியாழக்கிழமை  அதாவது ஜூன் மாதம் 29ஆம் தேதி தனது அறிக்கையை ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பித்தார். நேற்று அதாவது ஜூன் 30ஆம் தேதி, உயர்மட்ட குழு அதிகாரிகள் அறிக்கையைப் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர், பலர் ஆவணத்தை படிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.


293 பேர் உயிரிழப்பு:


விபத்து நடந்த ஒரு வாரத்திற்குள் CRS இடைக்கால அறிக்கையை இறுதி அறிக்கைக்கு முன் தாக்கல் செய்தது, ​​ ரயில்வே இம்முறை  ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது என்பதை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். அறிக்கையில் தவறுகள் இருந்தால் அதைத் தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விபத்து நடந்த தென்கிழக்கு ரயில்வேயின் ஐந்து உயர் அதிகாரிகளை ரயில்வே ஏற்கனவே இடமாற்றம் செய்துள்ளது.


ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஜூன் 2 அன்று மூன்று ரயில்கள் மோதியதில் 293 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,000 பேர் காயமடைந்தனர். ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் முழு வேகத்தில்  வந்த ரயில், பஹானாகா பஜார் ஸ்டேஷன் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதனால் மெயின் லைனுக்கு அருகில் இருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன.  அப்போது பெங்களூரு-ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸின் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது.