முன்னணி நடிகர்களின் படத்தை தயாரிக்கும் ஏ.ஜி.எஸ் நிறுவனம், லவ் டுடே படத்தை தயாரிக்க எப்படி ஒப்புக்கொண்டனர் என்பதை குறித்து நடிகர் மற்றும் இயக்குநரான பிரதீப் ரங்கநாதன், ஏபிபி நாடுவிற்கு பிரத்யேக பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.


ட்ரைலர் வெளியான நாள் முதல் லவ் டுடே படத்திற்கு நிறைய எதிர்ப்பார்ப்புகள் இருந்தது. அந்தவகையில், இந்த படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. பட பிரோமோஷனுக்காக, ஏபிபி நாடு நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி ஒன்றை, படத்தின் இயக்குநர் மற்றும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கொடுத்து இருந்தார். அதில், செய்தியாளர் “ ஏ.ஜி.எஸ் நிறுவனத்தை, உங்கள் கதையால் எப்படி ஒப்புக்கொள்ள வைத்தீர்கள்”  என்ற கேள்வியை கேட்டார்.


                                         


அதற்கு பதிலளித்த பிரதீப் ரங்கநாதன், “ ஏ.ஜி.எஸ் என்னை ரொம்ப நம்பினார்கள். நான் இயக்கும் படத்துடன் அவர்கள் இணைந்து பணிபுரிய வேண்டும் என்று  ஆசைப்பட்டதாக அகோரம் சார் கூறினார்.  படத்திற்கான கதையை சொல்லும் போதே அவர்கள் குதூகலமாகிவிட்டனர். நான் தான் ஹீரோவாக நடிக்க போறேன் என்று சொன்னவுடனும் அவர்கள் எக்சைட் ஆகிவிட்டனர். இந்த கதையும் வொர்க்-கவுட் ஆகும் என்று நம்பினர்.


மேலும், முழு கதையை அவர்களிடம் விவரத்தேன். அதை கேட்ட அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களை நான் சமாதானப்படுத்த தேவையில்லை. அவர்கள் மிகவும் தெளிவான தயாரிப்பாளர்கள். எது வேலைக்கு ஆகும், எது ஆகாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிகிறது. இப்படத்தை தயாரிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தது அவர்களின்  ஸ்டேடர்ஜி. எனது மெனக்கெடல் என்னுடைய முந்தைய பயணத்தில் இருந்தது. ஆனால், ஏ.ஜி.எஸ் இடம் நான் மெனக்கெடவில்லை. அவர்களின் புத்திசாலித்தனமும், அவர்களுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் வொர்க்-அவுட்டாகி விட்டது.” இவ்வாறு கூறினார்.


லவ் டுடே படக்குழுவினர் :






கோமாளி படத்தின் டைரக்டரான பிரதீப் ரங்கநாதன், இந்தப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவருக்கு ஜோடியாக நாச்சியார் மற்றும் ஹீரோ படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, சூப்பர் சிங்கர் ஆஜித் ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் வரும் பச்சை இலைய தட்டி என்ற பாடல் வைரல் ஆகி வருகிறது.


படத்தின் முழு விமர்சனத்தை படிக்க : Love Today Review : ‘லவ் பண்ணலாமா வேணாமா’.. மொபைல் சண்டை ஜெயித்ததா தோற்றதா? - வந்தாச்சு ‘லவ் டுடே’ திரைவிமர்சனம்!