குஜராத் சட்டப் பேரவை தேர்தலின் ஆம் ஆத்மி கட்சியின் (Aam Aadmi Party (AAP) முதலமைச்சர் வேட்பாளராக இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். 


குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் இசுதன் காத்வி முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 


அகமதாபாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.குஜராத் சட்டப்பேரவை தேர்தல்  இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.


மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக  டிசம்பர் 1-ஆம் தேதியும், 93 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக  டிசம்பர் 5- ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள்  டிசம்பர் 8- ஆம் தேதி எண்ணப்படுகிறது. 


தேர்தல் ஏற்பாடுகள்:


மாநிலத்தில் 51,700 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில் 4.6 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் 4.90 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 33 வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களாக இளைஞர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். மாநிலத்தில் 1,274 வாக்குச்சாவடி மையங்கள் பெண் அலுவலர்களால் நிர்வகிக்கப்பட உள்ளது. குஜராத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.


ஊடகவியலாளர் இசுதன் காத்வி குஜராத் அரசியல் களத்தில் ஆம் ஆத்மியின் நம்பியை பெற்ற அரசியல்வாதி. இன்று முதலமைச்சர் வேட்பாளராக உயர்ந்துள்ளார்.


இசுதன், தற்போது ஆம் ஆத்மி கட்சியின் இணைபொதுச் செயலாளராகவும், தேசிய செயற்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். அரசியல் பயணத்தை தொடங்கும் முன் இவர் இதழியல் துறையில் பணி புரிந்துள்ளார். செய்தி தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக இருந்துள்ளார்.



செய்தி தொலைக்காலத்தில் குஜராத்தி மொழியில் இரவு நேரத்தில் ஒளிப்பரப்பான பரைம் டைம் விவாத நிகழ்ச்சியான மஹாமந்தன் (Mahamanthan) மிகவும் பிரபலமானது. பல்வேறு சமூக பிரச்சினைகள் குறித்து நிபுணத்துவம் பெற்றவர்களுடன் விவாதம் செய்யும் நிகழ்ச்சி அது. அந்நிகழ்ச்சி வெற்றி பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. VTV News-ன் ஆசிரியர் பொறுப்பிலும் இருந்துள்ளார். மேலும், இவர் தொகுத்து வழங்கிய பரைம் டைம் நிகழ்ச்சி ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் நீடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


அரசியல் பயணம்:


கடந்த 2021 ஆம் ஆண்டு, தனது பணியை விட்டுவிட்டு ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்து கொண்டார் இசுதன். அகமதாபாத் நகரில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைமையகத்தின் தொடக்க விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.


இசுதன் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “ இசுதன் தன் ஊடகவியலாளர் பணியை தியாகம் செய்துவிட்டு, மாற்றத்திற்காக அரசியலில் தன்னை இணைத்து கொண்டது பெரிய விஷயம்.” என்று பாராட்டினார்.


ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் 55 பேருடன் பேரணி, பாலியல் வழக்குகள் உள்ளிட்டவைகள் மற்றும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் குஜராத்தில் பா.ஜ.க. தலைமையகமான கமலாலயத்தில் அத்து மீறி நுழைந்தது உள்ளிட்டவைகளுக்காக இசுதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பு தேர்வு வினாத்தாள் முன்னரே வெளியாகிய சர்ச்சையை எதிர்த்து போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி பா.ஜ.க. வின் அலுவலகத்தில் நுழைய முற்பட்டது. இந்த விஷயத்திற்காக இசுதன் மீது வழக்கு தொடரப்பட்டு,  அவருக்கு காந்தி நகர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. 


குஜராத் மாநிலத்தில் பிரபல ஊடகவியலாளர் என்பதால் இவர் முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுள்ளார். குஜ்ராத் தேர்தலில் இவர் ஜொலிப்பாரா என்பதை பார்ப்போம்.