காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக வருடம் தோறும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் 75 வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் மேட்டூர் அணையிலிருந்து மே 24ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டனர். தற்போது குறுவை சாகுபடி அறுவடை பணிகள் என்பது 95 சதவீதம் முடிவடைந்த நிலையில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் அடுத்த கட்டமாக திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 517 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தாளடி நெற்பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் விவசாயிகள் நேரடி விதைப்பு முறையில் விதை விதைத்துள்ளனர். இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் திருவாரூர் மாவட்டத்தில் கடந்து நான்கு நாட்களாக கனமழை என்பது பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள தாளடி நெற்பயிர்கள் சுமார் 10000 ஏக்கர் பரப்பளவில் பாதிப்படைந்துள்ளன.
குறிப்பாக தெளித்து 20 நாட்களே ஆன தாண்டி நெற்பயிர்கள் வயலில் மழைநீர் தேங்கி உள்ளதால் அழுகி பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாவூர், தென்னவராயநல்லூர், உய்யக்கொண்டான், மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, குடவாசல், பேரளம், நன்னிலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாளடி நெற்பயிர்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளன. மேலும், திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் பெருமளவு ஈடுபட்டதால் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். இதில் முன்கூட்டியே சாம்பார் சாகுபடி பணியில் ஈடுபட்ட விவசாயிகள் பல நாற்று நன்கு வளர்ந்த நிலையில் இருப்பதால் இந்த மழை பாதிப்பில் இருந்து தப்பித்துள்ளனர். குறிப்பாக பின் பட்ட சம்பா சாகுபடியில் சன்ன ரகம் விதைத்ததில் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் கனமழையால் மழை நீரில் மூழ்கி சம்பா நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளது.
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் சில நாட்களாக விட்டுவிட்டு கனமழை என்பது பெய்து வருகிறது. மேலும் இரண்டு நாட்கள் மழை நீடித்தால் பாதிப்பு என்பது மேலும் அதிகரிக்க கூடும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் தாலடி நெற்பயிர்கள் மன்னார்குடி நீடாமங்கலம் தொகுதிகளில் அதிக அளவு பயிரிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் கனமழை என்பது மேலும் நீடிக்க கூடும் என்பதால் அப்பகுதிகளில் தாளடி நெற்பயிர் பாதிப்பு என்பது மேலும் அதிகரிக்க கூடும் என விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். ஏற்கனவே கடந்த இரண்டு வருடமாக குறுவை நெற்பயிருக்கு பயிர் காப்பீடு என்பது இல்லாத நிலையில் தற்போது தாளடி மற்றும் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதால் அரசு உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.