- Kalaignar Womens Assistance: மகளிர் உரிமைத் தொகை; செப்., 17இல் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செப்டம்பர் 17ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ளார். அதாவது தமிழ்நாடு அரசியல் முன்னோடியான பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி துவங்கப்படவுள்ள இந்த திட்டத்தை, முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில் தொடங்கிவைக்கவுள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் மூலம் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கப்படவுள்ளது. மேலும் படிக்க
- TN Weather Update: கொளுத்தும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகும்.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 01.08.2023 மற்றும் 02.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். மேலும் படிக்க
- Chennai Metro Rail: அதிக பயணிகளை ஈர்க்கும் சென்னை மெட்ரோ... குவியும் பயணிகள், நீளும் சேவைகள்..! ஜூலையில் எவ்வளவு பேர்?
சென்னை மெட்ரோ ரயில்களில் நடப்பாண்டில் கடந்த 6 மாதங்களை விட ஜூலை மாதத்தில் மட்டும் 8.46 லட்சம் பயணிகள் அதிகம் பயணித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 8 லட்சத்து 46 ஆயிரத்து 816 பயணிகள் மெட்ரோ ரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
- Manipur: சரின்னு சொல்லுங்க; ரூ.10 கோடி மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் ரெடி! - மணிப்பூருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்
மணிப்பூரில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவிடும் பொருட்டு 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கிடக் கோரி மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரேன் சிங்கிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதனை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் படிக்க
- Thagaisal Thamizhar Award: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு 'தகைசால் விருது’ - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
2023ஆம் ஆண்டுக்கான தகைசால் விருது திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு வழங்கப்படும் என தமிழநாடு அரசு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்' என்ற பெயரில் புதிய விருது 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க