Ponniyin Selvan : டாலிவுட், சாண்டல்வுட் என சுற்றி உள்ள சினிமாத்துறையினர் பான் இந்திய படம் எடுத்து ஆயிரம் கோடி வசூல் செய்ய, கோலிவுட் ரசிகர்கள் அட எப்படா நீங்க பான் இந்திய படம் (Pan Indian Movie) எடுத்து 1000 கோடி வசூல் செய்வீங்க என எதிர்ப்பார்த்த நிலையில் பொன்னியின் செல்வன் ஒன்றாம் பாகத்தின் டீசரை ஜூலை 8 ஆம் தேதி அதிகாரபூர்வமாக ரிலீஸ் செய்தது லைகா தயாரிப்பு நிறுவனம். மக்களின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பின்னரே டீசர் வெளியானது.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலின் கதையை தழுவிய இப்படம், இரண்டு பாகங்களாக எடுக்கப்படவுள்ளது. தற்போது பொன்னியின் செல்வன் ஒன்றாம் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. பட டீசர் வெளியான போது சில ரசிகர்கள் அதிருப்தியில் இணையத்தில் வருத்தெடுத்தனர். சிலர் பொன்னியின் செல்வன் படத்தை ராஜமெளலி இயக்கியிருந்தால் வேற லெவலில் இருந்து இருக்கும் என பதிவு செய்ததிற்கு, ”பொன்னியின் செல்வன் படத்தை ராஜமௌலி எடுத்துருக்கலாம்.. எடுத்திருக்கலாம்தான்.. எடுத்திருந்தா இதுல விக்ரம் தோள்மேல யானை இருந்திருக்கும்..” என ட்வீட் செய்தனர்.
ஒருபக்கம் நெட்டிசன்கள் படத்தின் டீசரை கலாய்த்து தள்ளினாலும், மறுபக்கம் இப்படத்திற்கென தனி எதிர்ப்பார்பும் உள்ளது ஏனென்றால் இப்படமானது தமிழ் சினிமாவின் கனவாகும். முன்னாள் நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் வந்தியத்தேவனாக நடிக்க ஆசைப்பட்டார். நடிகர் ஜெமினி கணேசனை அருண்மொழிவர்மனாகவும், சிவாஜி கணேசனை ஆதித்த கரிகலனாக நடிக்க வைக்க முடிவும் எடுத்தாராம்.
இதற்காகவே 1958-ல் ரூ.10,000 கொடுத்து நாவலின் காப்புரிமையை பெற்றார் எம்.ஜி.ஆர். அவரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அப்படத்தை எடுக்க இயலவில்லை. ஆனால் இயக்குனர் பாரதி ராஜாவிடம், கமல் ஹாசனை வந்தியத்தேவனாகவும் ஸ்ரீ தேவியை குந்தவையாகவும் வைத்து படம் எடுக்க சொன்னார்.கமல் ஹாசனும் எம்.ஜி.ஆரின் ஆசையை நிறைவேற்ற மணிரத்தினத்துடன் இணைந்து படம் எடுக்க ஆலோசனை செய்தனர். பட்ஜெட் பிரச்னை காரணமாக இந்த திட்டமும் நிறைவேறவில்லை.
நீண்ட நாள் கனவிற்கு பிறகு இப்படம் செப்டம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது. எம்.ஜி.ஆர்-க்கு பதில் நடிகர் கார்த்தி வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்திலும் , ஜெமினி கணேசனுக்கு பதில் நடிகர் ஜெயம் ரவி அருண்மொழிவர்மன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ளார். அரோக்கிய குறைவால் நடிகர் விக்ரம் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட காரணத்தால், பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டில் பங்கு பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது. நடிகர் (Vikram) தமிழ், மலையாளம் , தெலுங்கு, கன்னடம், இந்தி என 5 மொழிகளில் அவரே டப்பிங் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ நேற்று லைகா தயாரிப்பு (Lyca productions) நிறுவனத்தின் பக்கத்தில் வெளியானது.
Also Read : Ponniyin Selvan : கமலின் கம்பீர குரலில் பொன்னியின் செல்வன்.. அடடே அப்டேட்டாக வந்த சூப்பர் தகவல்!