ஐபிஎல் நிறுவனர் லலித் மோடியும், முன்னாள் மிஸ் யுனிவர்சும் பிரபல நடிகையுமான சுஷ்மிதா சென்னும் காதலில் இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், இருவரும் டாக் ஆஃப் த டவுனாக மாறியுள்ளனர்.


’புதிய தொடக்கம் புது வாழ்வு!’


தற்போது 56 வயதாகும் லலித் மோடி முன்னதாக இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தான் சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் படங்களைப் பதிவிட்டு, "குடும்பத்துடன் மாலத்தீவு சர்தீனியாவுக்கு சுற்றுப்பயணம் சென்று மீண்டும் லண்டனுக்குத் திரும்பியுள்ளேன் - சிறப்பாகத் தோற்றமளிக்கும் எனது பார்ட்னர் சுஷ்மிதா சென் குறித்து குறிப்பிடத் தேவையில்லை. நிலவில் இருப்பது போல் உணர்கிறேன். இறுதியாக ஒரு புதிய தொடக்கம், ஒரு புதிய வாழ்வு. காதலில் மகிழ்ச்சியாக உள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.


 






வயது வித்தியாசம்


இவரது இந்தப் பதிவு நெட்டிசன்களை வாயடைக்க வைத்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.  தற்போது 46 வயதாகும் சுஷ்மிதா சென், கடந்த ஆண்டு தன் முன்னாள் பாய் ஃப்ரெண்ட் ரோஹ்மான் ஷாவலைப் பிரிவதாக அறிவித்திருந்தார்.


ஐபிஎல் போட்டிகளின் முன்னாள் தலைவர் லலித் மோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாக 2010ஆம் ஆண்டு பிசிசிஐ புகார் அளித்தது.  தொடர்ந்து இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் வசிக்கும் லலித் மோடி மீது வரி ஏய்ப்பு, பண முறைகேடு வழக்குகள் உள்ளன.


புற்றுநோயால் உயிரிழந்த முன்னாள் மனைவி




புற்றுநோயுடன் போராடி வந்த லலித் மோடியின் மனைவி மினல் மோடி கடந்த 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார்.  1991ஆம் ஆண்டு, தன்னை விட 10 வயது மூத்தவரான மினல் மோடியைத் திருமணம் செய்துகொண்ட லலித் மோடி, மினல் மோடியின் இறுதிகாலம் வரை அவருடன் திருமண வாழ்வில் இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.


மேலும் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாத சுஷ்மிதா சென், ரெனி சென் அலிசா சென் என்ற இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.


இந்நிலையில், லலித் மோடி - சுஷ்மிதா - மினல் மோடி வயது வித்தியாசம் குறித்து ஒருபுறம் நெட்டிசன்கள் காரசாரமாக விவாதித்து வரும் நிலையில், காதலுக்கு வயது ஒரு பொருட்டல்ல எனவும் மற்றொரு தரப்பினர் அடிக்கோடிட்டு இவர்களை வாழ்த்தி வருகின்றனர்.


விரைவில் திருமணம்?


இந்நிலையில், லலித் மோடியின் இந்தப் பதிவு இணையத்தில் புயலாய் பரவியதை அடுத்து தாங்கள் இருவரும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை ஆனால் விரைவில் அதுவும் நடக்கலாம் என லலித் மோடி விளக்கமளித்துள்ளார்.


 


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண