மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவருகிறது. முன்னதாக இப்படத்தின் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தசூழலில், பொன்னியின் செல்வன் படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டது. 


அந்த டீசர் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அதிக பார்வையாளர்கள், அதிக லைக்ஸ்களை பெற்று பல சாதனைகளை படைத்து வருகிறது. 1955ஆம் ஆண்டு கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை மணிரத்னம் இயக்குகிறார். பிரம்மாண்ட நடிகர்களுடன் உருவாகி வரும் இப்படம், தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.






இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் வெளிவர உள்ள நிலையில், இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 


பொன்னியின் செல்வன் டீசர் வெளியானதை தொடர்ந்து படத்தின் எதிர்ப்பார்ப்பு நொடிக்கு நொடி அதிகரித்துக்கொண்டே வருகிறது. எங்கையாவது யாராவது படத்தின் சீக்ரெட் குறித்து ஏதாவது சொல்லிவிட்டால் அதுதான் அன்றைய நாளில் மிகப்பெரிய வைரல்.


இந்தநிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் தொடர்பான பல காட்சிகளை இணைக்கும் பின்னணி குரலுக்கு நடிகர் கமல்ஹாசன் கொடுக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 


அதேபோல், தமிழில் சிறப்பு காட்சிக்காக கமலுடன் மணிரத்னம் குரல் கொடுக்கிறார். மேலும், அந்தந்த பின்னணி குரல் வல்லுநர்களை தேர்ந்தெடுத்து மற்ற மொழிகளிலும் குரல் கொடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த பின்னணியில் கமல் தமிழில் பேசினால் நன்றாக இருக்கும் என படக்குழு திட்டமிட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண