நாள்: 15.07.2022


நல்ல நேரம் :


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


கௌரி நல்ல நேரம் :









இரவு 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை


இராகு :


காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை :


காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம் :


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை


சூலம் –  கிழக்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே,


இந்தநாள் உங்களுக்கு மனதில் வீண்பயம் உண்டாகும். அதனால் எதிலும் அலட்சியமாக இருக்கக்கூடாது. பணிபுரியும் இடங்களிலும், சுற்றத்தாரிடமும் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. சிவபெருமானை வணங்கி சிறப்பு காணலாம். 


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, 


இந்த நாள் உங்களுக்கு இரக்க குணம் உண்டாகும். பழைய பகை ஒன்றை நீங்களே முன்வந்து முடித்துக்கொள்வீர்கள். பெரியவர்கள் சொல் கேட்டு நடப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு பயணம் செய்து மகிழ்வீர்கள். நன்மைகள் நிகழும்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு ஓய்வான நாள் ஆகும். தொடர்ச்சியாக ஓய்வின்றி அலைந்ததற்கு நல்ல ஓய்வு கிட்டும். மன அமைதியுடன் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள். பிள்ளைகளுடன் மனம்விட்டு பேசுவீர்கள். ஆரோக்கியம் சீராகும். மனதில் புத்துணர்ச்சி கிட்டும். 


கடகம் :


கடக ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு லாபகரமான நாள் ஆகும். நீண்ட நாள் வசூலாகாத கடன் வசூல் ஆகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களுக்கு அருமையான நாள் ஆகும். 


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு  கோபம் உண்டாகும். அதனால் விநாயகப்பெருமானை வணங்கி மன அமைதி காணலாம். அடுத்தவர் விவகாரத்தில் தலையிடக்கூடாது. பெற்றோர்கள் பெருமைப்படும் விதத்தில் பிள்ளைகள் செயல்படுவார்கள். கொடுக்கல் வாங்கலுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடாது. தொலைதூரப் பயணத்தை தவிர்ப்பது நல்லது.  


கன்னி :


கன்னி ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு அருமையான நாள் ஆகும். நீண்ட நாள் எதிர்பார்த்த அங்கீகாரம் கிட்டும். தொழில் புரியும் இடத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். திருமணப் பேச்சுக்கள் உண்டாகும். சுபகாரியங்கள் விரைவில் நடக்கும். பணவரவு மீண்டும் தொடங்கும். 


துலாம் :


துலாம் ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமையும், குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்களின் சந்திப்பு நிகழும். தொலைபேசி வழித்தகவல்கள் புத்துணர்ச்சியை அளிக்கும். ஆரோக்கியம் சீராகும்.  


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே,


இந்த நாள் வெற்றிகரமான நாள் ஆகும். குடும்பத்தில் சந்தோஷம் பொங்கும். விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிகள் குவியும். வியாபாரிகளுக்கு மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கிட்டும்.  குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும். குழந்தைப் பேறு உண்டாகும்.  


தனுசு :


தனுசு ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு உதவிகள் குவியும். மிக கடினமான சூழல் தவிடுபொடியாகும். தக்க நேரத்தில் நண்பர்களும், குடும்பத்தினரும் கைகொடுப்பார்கள். பெரியவர்களின் சொல் கேட்டு நடப்பீர்கள். பெண் குழந்தைகள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. 


மகரம் :


மகர ராசி நேயர்களே,


இந்தநாள் உங்களுக்கு நன்மைகள் நிறைந்த நாள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த மனக்கசப்பு அகலும். சகோதரி வழியில் நன்மைகள் நடக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை வலுக்கும். பூர்வீக சொத்துக்கள் உங்கள் வசமாகும். 


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே,


இந்த நாள் உங்களுக்கு மன நிறைவான நாளாக அமையும். நீண்டநாள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சகோதரர்கள் வழியில் சுபகாரியங்கள் நடக்கும். பதவி உயர்வு கிட்டும். இலக்கை நோக்கி பயணிப்பீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.


மீனம்:


மீன ராசி நேயர்களே,


இந்தநாள் உங்களுக்கு புகழ்வாய்ந்த நாளாகும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும், பாராட்டும் கிட்டும். சகோதர வழிப்பாசம் அதிகரிக்கும். நீண்டநாள் நீடித்து வந்த குடும்ப சிக்கல் தீரும். ஆன்மீக பயணம் செல்லும் யோகம் உண்டாகும். காசி விஸ்வநாதர் வழிபாடு மனதிற்கு நிம்மதி தரும். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண