சென்ற ஆண்டு கோலிவுட்டில் வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திரங்களைக் கொண்டு 'நாம் 2023' எனும் மாத காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது.


கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு  கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது மணிரத்னத்தின் கனவுப்படமான ’பொன்னியின் செல்வன்’. 


தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில், கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்திருந்தது. பிரம்மாண்ட காட்சிகளுடன், மணிரத்தினத்தின் நேர்த்தியான திரைக்கதையும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.


விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஐஸ்வர்யா லட்சுமி என பெரும் நடிகர் பட்டாளமே நடித்த இப்படம் 450 கோடிக்கும் மேல் வசூலை வாரிக் குவித்தது. தொடர்ந்து ஓடிடி தளமான அமேசான் ப்ரைமிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.


’பொன்னியின் செல்வன் பாகம் 2’க்கான படப்பிடிப்பையும் ஏற்கெனவே மணிரத்னம் முடித்துவிட்ட நிலையில், இந்த வெற்றிக்களிப்பை தக்கவைத்து சூட்டோடு சூடாக இரண்டாம் பாகத்தையும் இந்த ஆண்டே ரிலீஸ் செய்ய உள்ளனர் படக்குழுவினர்.


அதன்படி ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 2 வெளியாகும் என கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது.


இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை சிறப்பிக்கும்  விதமாக இப்படத்தின் கதாபாத்திரங்கள் அடங்கிய 2023ஆம் ஆண்டுக்கான பிரத்யேகக் காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது.


இந்தக் காலண்டரை மணிரத்னம் மற்றும் அவரது மனைவி சுஹாசினி இருவரும் இணைந்து வெளியிட, எழுத்தாளர் கல்கியின் பேத்தியான கௌரி ராம நாராயணன் பெற்றுக் கொண்டார்.


 






மேலும் இந்தக் காலண்டர் வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ஜெயம் ரவி, ஜெயராம், ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இதையும் படிங்க: Vijay vs Ajith: விடாத விஜய்... அலட்டிக்காத அஜித்..! - பொங்கல் யாருக்கு...? - இதுவரை வெளியான படங்களின் போக்கிரி வில்லன் யார்?