பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு நாளை வெளியாகும் நிலையில், தமிழகத்தில் அதிகாலை மற்றும் நள்ளிரவு சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


நாளை (27-04-2023) காலை 9 மணிக்கு ‘பொன்னியின் செல்வன்-2’ படத்தின் முதல் காட்சி திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்-2' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீசாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் 2-ம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, முதல் நாள் சிறப்பு காட்சிகளின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில், பொன்னியின் செல்வன்-2 படத்திற்கு நள்ளிரவு மற்றும் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்போவது இல்லை என ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். இதன்படி தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் நாளை காலை 9 மணிக்கு 'பொன்னியின் செல்வன்-2' படத்தின் முதல் காட்சி திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால் அமெரிக்காவில் மட்டும் அதிகாலை 1.30 மணிக்கு பொன்னியின் செல்வன் 2 திரையிடப்படுகிறது. அதே போல் இங்கிலாந்தில் 3 மணிக்கும், துபாய்யில் 4 மணிக்கும், மலேசியாவில் 5.30 மணிக்கு, மகாராஷ்டிரா, கர்நாடகாவில் 6 மணிக்கும் வெளியாகிறது.


பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படங்களில் ஒன்றாகும். கல்கி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் பச்சனும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 


பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. இதனிடையே இந்த திரைப்படம் '4DX' வடிவத்திலும் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அண்மையில் அறிவித்தனர். மேலும் பொன்னியின் செல்வன் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் திரைக்கு வர உள்ளது.  


மேலும் படிக்க


Andhra Pradesh Farmer: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் கான்வாயை மறித்த விவசாயிகள்… வைரலாகும் வீடியோ! என்ன காரணம்?


IPL 2023 Varun Chakravarthy: எனது மகனை இன்னும் பார்க்கவில்லை.. இந்த மேன் ஆஃப் த மேட்ச் அவருக்கு தான் - வருண் சக்ரவர்த்தி உருக்கம்..!