தமிழர்களின் அறுவடைப் பண்டிகையான பொங்கல் இன்று உலகம் முழுவதுமுள்ள அனைத்து தமிழர்களின் இல்லங்களிலும் சாதி, மத பேதங்கள் கடந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


தைத்திருநாள்


தைத்திருநாளான இன்று சூரியனுக்கும் இயற்கைக்கும் விவசாயிகளுக்கும் நன்றி தெரிவித்து புத்தரிசியுடன் பொங்கல் வைத்து அனைத்து தமிழர்களும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.


இந்நிலையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் இன்று காலை முதல் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தும், தாங்கள் பொங்கல் கொண்டாடி மகிழும் புகைப்படங்களை இணைய தளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர்.


நடிகர், நடிகையரின் பொங்கல் ஸ்பெஷல் க்ளிக்ஸ்


அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது அயலான் படம் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் அயலான் ஏலியன் மற்றும் தன் குடும்பத்துடன் பொங்கல் வைக்கும் வகையில் புகைப்படம் பகிர்ந்து தன் ரசிகர்களுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.




நடிகை கீர்த்தி சுரேஷ் தன் நண்பரும் நடிகருமான கதிர் உள்ளிட்டோருடன் பொங்கல் வைத்து குலவையிட்டு மியூசிக்கல் சேர் விளையாட்டு விளையாடி வீடியோ பகிர்ந்துள்ளார்.


 






நடிகர் ஹரீஷ் கல்யாண், “உள்ளத்தில் உற்சாகம் பொங்க, வாழ்க்கையில் அனைத்து வளங்கள் வளர, அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்” எனப் பதிவிட்டு புகைப்படம் பகிர்ந்துள்ளார்.




இயக்குநர் மாரி செல்வராஜ் அனைத்து அன்பிற்கும் தைத்திருநாள் வாழ்த்துகள் என தன் குழந்தைகள் புகைப்படத்துடன் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.




நடிகர் அருண் விஜய் தன் குடும்பத்தாருடன் சூரியப் பொங்கல் வைத்து வாழ்த்தி புகைப்படம் பகிர்ந்துள்ளார்.




 


தன் கணவருடன் கர்ப்பிணியாக பொங்கல் கொண்டாடும் அமலா பால், “மார்கழி மாதத்தின் பொங்கல், பிரகாசமான நாட்களுக்கு செல்வதைக் குறிக்கும் வகையில் பெரும் முக்கியத்துவம் கொண்டுள்ளது, விவசாயத்தை மட்டுமல்லாமல், ஆன்மீகம் மற்றும் வளமான வாழ்க்கைக்கான ஆற்றல் வழங்குவதையும் குறிக்கிறது. இந்தப் பொங்கல் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், ஆன்மீக வளர்ச்சியையும் கொண்டு வரட்டும்” எனக் கூறி வீடியோ பகிர்ந்துள்ளார்.


 






இயக்குநர் பாரதிராஜா தன் வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.


 



மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!


Captain Miller Review: "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!