தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சற்று கால தாமதமாக துவங்கிய போதிலும், தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழையானது பதிவாகியது. குறிப்பாக சென்னை, நெல்லை, கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தை விளைவிக்கும் வகையில் மழையானது பதிவானது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில 1500 நாட்களுக்கு முன்பு மூன்று தினங்கள் தொடர்ந்து மழையானது பெய்து. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் பெருமளவு தண்ணீர் மூழ்கி பாலானது.
இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கொள்ளிடம் மாதானம் மயிலாடுதுறை செம்பனார்கோயில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேரில் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய அவர் கூறியதாவது, காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு வடகிழக்கு பருவமழை கை கொடுக்க வேண்டிய நேரத்தில் மலையானது வேறு எங்கோ பெய்து விட்டு, கடைசியாக அறுவடை செய்யும் நேரத்தில் இங்கு பெய்துள்ளது. இதனால் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையின் போது பெரும் பாதிப்பை சந்தித்தனர். அதிலிருந்து ஓரளவு மீண்ட விவசாயிகள் தற்போது முற்றிலும் அழிவை சந்தித்துள்ளனர். காவிரி டெல்டா கடைமடை பகுதிகளில் உள்ள நான்கு மாவட்டங்களை இந்த மழை புரட்டிப்போட்டு உள்ளது. விவசாய நிலங்கள் பாதிப்பு அரசு கூறியதை காட்டிலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.70 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யபட்டுள்ள நிலையில் சுமார் 35 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விலை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகி உள்ளது.
மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் அந்த தண்ணீர் ஆனது முழுமையாக இப்பகுதிகளுக்கு வந்து சேராமல், விவசாயிகள் பம்செட் மூலம் தண்ணீர் இறைத்து வயலுக்கு பாய்த்து செலவு செய்துள்ளனர். தற்போது இந்த தண்ணீரை வடிய வைக்க முடியாமல் அதனையும் மோட்டார்கள் மூலம் செலவு செய்து இரைத்துள்ளனர். இதே போன்று சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ஏக்கருக்கு ரூபாய் 35 வரை செலவு செய்து விவசாய பணி மேற்கொண்டுள்ளனர். ஆகையால் நெற்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 35 ரூபாய் நிவாரணமும், மானாவாரி பயிர்களுக்கு 1 ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கவேண்டும். அதுபோன்று ஆடு, மாடு போன்ற இதர பாதிப்புகளுக்கும் நிவாரணத்தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும்.
ஜனவரி மாதத்துடன் விவசாயிகளின் குறுகிய கால கடனுக்கான காலக்கெடு முடிகின்றது. இந்த கடனை நிரந்தரமாக தள்ளுபடி செய்யவேண்டும், தமிழக அரசு மட்டுமே நிதியை நிவாரணமாக வழங்கி வருகிறது. அது போதாது, ஒன்றிய அரசு பாரபட்சம் இல்லாமல் தமிழகத்திற்கு பேரிடர் மாவட்டமாக அறிவித்து, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், ஜனவரி 28 தேதி வரை தண்ணீர் திறக்கப்பட்ட வேண்டும் அந்த விதியினை பயன்படுத்தி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும், அதன் மூலம் எல்லா நீர்நிலைகளையும் நிரப்ப வேண்டும். மேட்டூரில் தண்ணீர் போதிய அளவு இல்லையெனில் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதை பெற வேண்டும் இல்லை என்றால் உச்சநீதிமன்றம் மூலம் தமிழ்நாட்டிக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கங்களின் மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி தெரிவித்தார்.