பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை பன்மடங்கு உயர்வு மல்லிகைப்பூ 4000 ரூபாய்க்கு விற்கப்படுவதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பூக்கள் விலை உயர்வு:
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அண்ணா வணிக வளாகம் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த பூ மார்க்கெட்டிற்கு திண்டுக்கலை சுற்றியுள்ள கிராம பகுதிகளான வெள்ளோடு நிலக்கோட்டை செம்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் பூக்கள் பயிரிடப்பட்டு அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த பகுதியில் விளையக்கூடிய மல்லிகை பூ, முல்லை பூ, கனகாம்பரம், செவ்வந்தி போன்ற பல்வேறு பூக்கள் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட்டிற்கு விவசாயிகள் தங்களது பூக்களை விற்பனை கொண்டு வருவது வழக்கம்.கடந்த வாரங்களில் பூக்களின் விலை குறைவாக காணப்பட்டது. தற்பொழுது நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளனர். தற்பொழுது அதிகமான பனிப்பொழிவின் காரணமாகவும் திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து குறைவாக உள்ளது.
மழைக்கு “டா டா, பய் பய்”! 2024 எப்படி இருக்கப்போகிறது? சுடச்சுட ஒரு ரிப்போர்ட்..
Novak Djokovic: விராட் கோலியுடன் மேசேஜ்ல பேசுவேன்... டென்னிஸ் ஜாம்பவான் நோவாக் ஜோகோவிச்!
விவசாயிகள் மகிழ்ச்சி:
இதன் காரணமாக பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்து காணப்படுகிறது. மேலும் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து சென்னை சேலம்,கேரளா ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு பூக்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது மற்றும் அங்கிருந்து வந்து வியாபாரிகள் பூக்களை அதிகளவில் வாங்கி செல்வதாலும் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சராசரி நாட்களில் மல்லிகைப்பூ 200 முதல் 300 வரை விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மல்லிகை பூ - 3500 முதல் 4000 வரை விற்கப்பட்டு வருகிறது . இதே போல்
முல்லை பூ - 2000 முதலும்,
கனகாம்பரம் - 800
ஜாதிப் பூ - 1500
செவ்வந்தி - 150
சம்பங்கி - 200
அரளி - 300
கோழி கொண்டை - 70
செண்டு மல்லி - 60
ரோஸ் - 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.