இமயமலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், தற்போது உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ்-இல் உள்ள தயானந்த சரஸ்வதி மடம், வியாசர் குகை, சரஸ்வதி நதி மறையும் இடத்திற்கு  சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது மட்டுமல்ல ரஜினி பாபாவின்  தீவிர பக்தர். இதனால் இமயமலை பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முறையும் பாபா குகையில் தியானம்  செய்வதுதான் அவருக்கு மன நிறைவை அளிக்கும் என கூறப்படுகிறது.


பாபாஜி குகையில் ரஜினி:


அந்த வகையில் இந்த முறை மகாவதார் பாபாஜி குகைக்கு  செல்வதற்காக போலீஸ் பாதுகாப்புடன் சுமார் 2 மணி நேரம்  ரஜினி மலை ஏறிய புகைப்படம் தற்போது ரஜினி ரசிகர்களின் கவனம் பெற்று இருக்கிறது.


மேலும்  ரஜினி பாபா குகையில்  தியானம் செய்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.  தியானத்தை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ள ரஜினி ,லக்னோ செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்ல  ரஜினி தனது இமயமலை பயணத்தை தொடர்ந்து இயக்குனர் ஞானவேல் இயக்கும்  தலைவர் 170  மற்றும் லோகேஷ் இயக்கும் தலைவர் 171 படங்களின் படப்பிடிப்பில்  கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


வசூல் வேட்டையில் ஜெயிலர்:


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10-ம் தேதி  உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 900 மேற்பட்ட திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது.  உலகம் முழுவதும் 4000 -க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியானது. 24 ஆண்டுகளுக்கு பின் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் நடிப்பில் இத்திரைப்படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.  இப்படத்தில் நடித்துள்ள ஷிவ ராஜ்குமாருக்கும்  ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது.


நெட்ஃப்ளிக்ஸ்:


ஜெயிலர் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் உலக அளவில் ரூ.350 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஜெயிலர் படம் ஓடிடியில் வெளியாவது குறித்த தகவல் கசிந்துள்ளது. வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி சன் நெக்ஸ்ட் மற்றும் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


மேலும் படிக்க, 


10th Original Certificate: 10-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஆக.18 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்: பெறுவது எப்படி?


Wahab Riaz Retirement: வாட்சனை உலகக் கோப்பையில் வதக்கிய வஹாப் ரியாஸ்... சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!