பிரபல தமிழ் முன்னணி நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பேரழகன். இயக்குனர் சசி சங்கர் இயக்கத்தில் வெளியான பேரழகன் படத்தில், சூர்யா, ஜோதிகா, விவேக், உட்பட பலர் நடித்திருந்தனர்.


இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஒரு காட்சியில் பெண் பார்க்க செல்வார்கள். அதில்,  உயரம் குறைவான பெண்ணாக, சினேகா என்கிற கதாபாத்திரத்தில் கற்பகம் என்பவர் நடித்திருந்தார். இந்த சீன் படு பேமஸ் ஆனதால் கற்பகம் பிரபலமடைந்தார். தற்போது சினிமாவை விட்டு விலகியுள்ள கற்பகம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.


“அதில் இரண்டு அண்ணன், மூன்று அக்கா என எனது குடும்பம் பெரிய குடும்பம். வீட்டில் நான் தான் கடைசி பெண், எனக்கு இரண்டு வயதாக இருக்கும் போதே அம்மா இறந்துவிட்டதால் அக்கா வீட்டில் தான் வளர்ந்தேன். அங்கேயும் வறுமை இருந்ததால் சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டேன்.


வறுமை காரணமாக எனது அக்கா வீட்டில் எனக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகை வந்தால் மட்டும் தான் துணி வாங்கித் தருவார்கள். கிழிந்த துணியோடுதான் இருப்பேன். பள்ளிக்கூடம் போகும்போதும் கெட்டுப்போன சாப்பாட்டை தான் கொடுத்தனுப்புவார்கள்.


இதனால், பள்ளிக்கூடத்தில் பசங்க எல்லாம் கேலி செஞ்சி சிரிப்பாங்க. பசங்க எல்லாம் என்னை கிண்டல் செய்து, ஸ்கூல் பேக்கை சாக்கடையில் வீசிவிடுவார்கள்.  இதனால் பள்ளி செல்வதற்கே அவமான இருக்கும். சாகலாம் என கூட நினைத்து இருக்கிறேன். அதன்பிறகு தான் ஸ்கூலுக்கு போவதை நிறுத்திவிட்டேன்.


பள்ளியில் இருந்து நின்ற பின் அக்கா வீட்டில் இருந்து அக்காவிற்கு உதவியாக வேலை செய்து காலத்தை கழித்து விட்டேன்.  பின் ராஜா என்பவரை திருமணம் செய்தேன். அவர் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்து உள்ளார். திருமணமான ஓராண்டில் எனக்கு ஓர் மகள் பிறந்தாள். அப்போது அற்புதத் தீவு எனும் மலையாளப் படத்தில்  நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நானும் என் கணவரும் சேர்ந்து நடித்தோம். 

பின்னர் ஜெயம் படத்தில் ‘வண்டி வண்டி ரயிலு வண்டி’ பாட்டில் நடித்தேன். அதனையடுத்து தான் பேரழகன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அந்த படத்தில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தேன்.  எங்கே பார்த்தாலும் என்னைப் பாராட்டினார்கள். அந்தப் படத்தில் எனக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள்.


ஆனால், ஏஜெண்ட் எனக்கு பாதி சம்பளத்தைத் தான் கொடுத்தார். என் கணவருக்கு குடிப்பழக்கம், நரம்பு தளர்ச்சி இருந்தது.  திடீரென கணவர் இறந்துவிட்டதால் என்ன செய்வதென அறியாமல்  தவித்தேன்.  அப்போது சூர்யா சார் தான் பணம் கொடுத்து உதவினார், மற்ற எந்த நடிகர்களும் எனக்கு உதவவில்லை” என தன் சோக கதையை பகிர்ந்து கொண்டுள்ளார் கற்பகம். 


மேலும் படிக்க


INDIA bloc: விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் தொகுதி பங்கீடு: I.N.D.I.A கூட்டணி எடுத்த அதிரடி முடிவு


திருச்சி போகனும் பிளாட்பாரம் எங்கே..? - மது மயக்கத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்தவர் அலப்பறை