கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.


 


 




கார், ஜீப் போன்ற வாகனங்களுக்கு ஒரு முறைக்கான கட்டணம் 55 லிருந்து 60 ரூபாய் ஆகவும், பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு  ஒருமுறை கட்டணம்  185 ரூபாயிலிருந்து 250 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மணவாசி சுங்கச்சாவடியில் அனைத்து வாகனங்களுக்கான சொந்த கட்டணம் ஐந்து ரூபாய் முதல் ரூபாய் 30 வரை உயர்த்தப்பட்டுள்ளது.


சரியான முறையில் சாலை அமைக்காமல், குண்டும், குழியுமாகவும் ஓட்டை உடைசல் சாலையாகவும்,  இரு வழிச்சாலையாகவும், குறைந்த தூரத்தில் இரண்டு சுங்கச்சாவடி அமைத்துள்ளனர். குறைந்த தூரம் கொண்ட சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்வால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.


 




 


இதுகுறித்து வாடகை வாகனம் ஓட்டுபவர்கள் தெரிவித்த போது, “திமுக ஆட்சிக்கு வரும்போது தேவையற்ற இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், தற்போது வரை அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. குறிப்பாக கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலைகள் இருவழிச்சாலையாகவும், குண்டும் குழியுமாக உள்ள சாலைக்கு இரண்டு இடங்களில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். குறிப்பாக அடிக்கடி கட்டண உயர்வு செய்வதால் வாடகைக்கு வாகனம் ஓட்டும் நாங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதலாக கட்டணத்தை வசூல் செய்ய முடியாத நிலையில் மற்றும் வாகனத்திற்கான உதிரி பாகங்கள் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறோம்” என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 


 


 




 


மேலும், அரசு உடனடியாக தேவையில்லாத சுங்கச்சாவடிகளை அகற்றி விட வேண்டும் என்றும், கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.