Assitant Director Death: நடிகர் சிம்புவின் ’பத்து தல' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சரவணன் இளம் வயதிலேயே உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பத்து தல:


2006-ஆம் ஆண்டு  வெளியான 'சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கி இயக்குநராக சினிமாவில் அறிமுகனமானவர் ஒபிலி கிருஷ்ணன். இந்த படத்தில் பிறகு இவருக்கு பெரிய  வாய்ப்புகள் எதுவும் கைகூடவில்லை. அதன்பிறகு, 2014ஆம் ஆண்டு ஆரி அர்ஜுனனை வைத்து ’நெடுஞ்சாலை' படத்தை இயக்கினார்.


இந்த படம் ப்ளாப்பான நிலையில், கடந்த ஆண்டு சிம்புவை வைத்து 'பத்து தல' படத்தை இயக்கினார். ஆனால், இந்த படமும் பெரியதாக வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், தன்னிடம் பத்து தல படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சரவணன் உயிரிழந்ததாக இயக்குநர் ஒபிலி கிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.


இயக்குனர் இரங்கல்:


இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, "குட் பை சரவணன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.  உதவி இயக்குநர் சரவணனுக்கு கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.


உதவி இயக்குநர் சரவணன் உயிரிழப்பு:


இவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். சுமார் ஓராண்டாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், உடல் நிலைமை மோசமடைந்து பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். 






இதற்கிடையில், உதவி இயக்குநர் சரவணன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த விஷயம் தெரிந்ததும் நடிகர் சிம்பு இவருக்கு உதவி செய்திருக்கிறார். இவரது மருத்துவமனை செலவுக்காக கடந்த டிசம்பர் மாதம் ஒரு லட்ச ரூபாயை கொடுத்ததாக தெரிகிறது. 


ஆனால், சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்தது சினிமா வட்டாரத்தினரை சோகத்தை ஆழ்த்து உள்ளது. இவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 




மேலும் படிக்க


The Kerala Story: ஓடிடியில் ரிலீசானது சர்ச்சையை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி!