பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 5 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 


நடிகர் சிலம்பரசன், பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, அனு சித்தாரா, கலையரசன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளத்தின் நடிப்பில் உருவாகியுள்ள படம் பத்து தல. கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.


கன்னடத்தில் 2017ஆம் ஆண்டு வெளியான முஃப்தி படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தில், சிம்பு ஏஜிஆர் எனும் டானாக நடித்துள்ளார்.  ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.  ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது


மார்ச் 30ஆம் தேதி பத்து தல படம் வெளியாகும் நிலையில், இன்று இந்தப் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று (மார்ச்.18) மாலை 5 மணிக்குத் தொடங்கி பத்து தல இசை வெளியீட்டு விழா நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக தன் புது லுக்கில் சிம்பு அசத்தலாக விழாவுக்கு வருகை தந்தார்.


விழா நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் , பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் வருகை தந்துள்ள நிலையில், முன்னதாக சிம்புவுக்காக ஏவி ஒன்று வெளியிடப்பட்டது.


அதில், நடிகர் விஜய் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சிம்புவைப் பற்றி பேசிய காட்சி ஒளிபரப்பட்ட நிலையில், அதனைக் கண்ட சிம்பு உணர்ச்சிப்பெருக்கில் ஆழ்ந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.


வாரிசு படத்திம் இடம்பெற்ற ’தீ தளபதி’ பாடலை விஜய்க்காக நடிகர் சிம்பு பாடி பெர்ஃபார்ம் செய்திருந்த நிலையில், அதனை வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியுடன் விஜய் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில், விஜய் பேசிய அந்தக் காட்சி பத்து தல இசை வெளியீட்டு விழாவில் ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் சிம்பு அதனைக் கண்டு உணர்ச்சிப் பெருக்கில் கண் கலங்கும்படியான வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


 






மேலும் அண்ணன் - தம்பி பாசம் என்றால் இதுதான் எனக் கூறி சிம்பு மற்றும் விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.


முன்னதாக பத்து தல படத்தின் ட்ரெய்லர் இன்று இரவு 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ட்ரெய்லரை பெரிதும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.


மேலும் படிக்க: PS 2 First Single: “குந்தவையும் வந்தியத்தேவனும்” .. வெளியானது “பொன்னியின் செல்வன்-2” படத்தின் அப்டேட்.. என்னன்னு தெரியுமா?