Ponniyin Selvan 2 First Single: பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடல் வெளியாகும் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி இயக்குநர் மணி ரத்னம் “பொன்னியின் செல்வன்” என்ற படத்தை இயக்கியுள்ளார். 2 பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. வசூலிலும் ரூ.500 கோடிக்கும் மேல் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வசூலித்தது. 


5 மொழிகளில் உருவாகி இந்த படத்தை நாவலை படித்தவர்களும் சரி, படிக்காதவர்களும் சரி எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. இதனால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து படம் பார்த்தனர். கிட்டதட்ட 50 வருடம் கனவு காவியம் திரைப்படமாக வந்ததில் தமிழ் சினிமா ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். 


இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், விக்ரம் பிரபு, பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி,  பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர், ரஹ்மான் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இதனிடையே பொன்னியின் செல்வன் தொடர்ச்சியான 2 ஆம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதன்படி பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி, நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு “அக நக” என தொடங்கும் பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.