விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஜய் தொலைக்காட்சியிலே அதிக ரசிகர்களை கொண்ட சீரியலாக பாக்கியலட்சுமியும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களும் உள்ளன. பாண்டியன் ஸ்டோர்சில் விறுவிறுப்பான திரைக்கதையால் நகர்ந்து வந்த தொடர் தற்போது விறுவிறுப்பு குறைந்து வழக்கமான கதையாக மாறிக்கொண்டு வருவதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


பாண்டியன் ஸ்டோர்சின் நாயகியான முல்லைக்கு திடீரென மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காக ரூபாய் 5 லட்சம் தேவைப்பட்டு, தற்போது சிகிச்சையும் தொடங்கப்பட்டுள்ளது. முல்லையை பத்திரமாக கதிர் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்க, வீட்டில் வழக்கம்போல ஐஸ்வர்யாவும் – மீனாவும் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.




ஐஸ்வர்யா பாடல் கேட்க, மீனா பாடலின் சத்தம் அதிகமாக இருப்பதாக கூறி அதைக்குறைக்குமாறு கூறுகிறார். ஆனால், அது பாட்டு இல்லை வீடியோ என்று ஐஸ்வர்யா மீனாவிற்கு விளக்கம் அளிக்கிறார். இதனால், மீனாவும் ஐஸ்வர்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அப்போது, கண்ணனும், தனம் அண்ணியும் இருவரையும் சமாதானப்படுத்துகிறார். ஐஸ்வர்யாவும், மீனாவும் என்ன பேச வேண்டுமோ? எல்லாவற்றையும் பேசுகின்றனர்.


கடைசியில் மீனாவும், ஐஸ்வர்யாவும் நாங்கள் சண்டையே போடவில்லை என்று கூறுகின்றனர். பின்னர், வீட்டுக்கு வரும் மூர்த்தி, ஜீவாவிடம் முல்லையைப் பார்த்து விசாரிக்கிறார். இரவில் உடல்நிலை முடியாத தனது மனைவி முல்லையை கணவன் கதிர் கவனித்துக் கொள்வதுபோல இந்த எபிசோட் முடிகிறது.




ரசிகர்களை மிகவும் விறுவிறுப்பாக வைத்திருந்த பாண்டியன் ஸ்டோர் தற்போது மிகவும் தொய்வாக திரைக்கதையில் செல்வது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் எபிசோட்களில் திரைக்கதையின் சுவாரஸ்யம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க : "9 மாசம்.. ஹவுஸ் ஓனர் வீட்டு நாய் கூட சின்ன ரூம்ல தங்குனேன்” : ’கோவா’ நடிகை பியா சொல்லும் பகீர்..


மேலும் படிக்க : Madan Gowri : மதன்கௌரியை ஒருமையில் திட்டிய நடிகை காஜல்...! ஏன் தெரியுமா..?


மேலும் படிக்க : Nazriya Nazim: நீங்க முஸ்லீம் பொண்ணு.. ஆனா படத்துல..! வில்லங்க கேள்வி.. நஸ்ரியா அளித்த நச் பதில்.!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண