Nithya Menen | அவ்வளவு சர்ச்சை.. அந்த விஷயத்தை மறக்க முடியல.. நித்யா மேனன் சொன்ன வாழ்க்கை ரகசியம்..

இந்தச் சம்பவம் நடந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் அதனை என்னால் மறக்க முடியவில்லை. அந்தச் சம்பவம் என்னை மிகவும் காயப்படுத்தியது - நித்யா மேனன்

Continues below advertisement

நடிகை நித்யா மேனன் தமிழில் 180, வெப்பம், ஓ காதல் கண்மணி, மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். திறமையான நடிகை என்று பெயர் பெற்றிருக்கும் நித்யா மேனன் தற்போது தமிழில் இரண்டு படங்களிலும் , மலையாளம், தெலுங்கு மொழிகளில் தலா ஒரு படத்திலும் நடித்துவருகிறார்.

Continues below advertisement

இந்நிலையில் தான் சினிமாவில் சந்தித்த அனுபவங்கள் குறித்து பேசியிருக்கும் நித்யா மேனன், “10 ஆண்டுகளுக்கு முன்பு நான் தெலுங்கு படத்தில் அறிமுகமானபோது பிரபாஸ் பற்றி என்னிடம் கேள்வி எழுப்பினர். அப்போது பிரபாஸ் யார் என்று எனக்கு தெரியாது என்று பதில் அளித்ததை பெரும் சர்ச்சையாக்கினர். அப்போது எனக்கு தெலுங்கு தெரியாது. அந்த நேரத்தில் அவர் பாகுபலி படத்திலும் நடித்திருக்கவில்லை. அதனால் அவர் எனக்கு தெரியாது என்ற உண்மையைத்தான் சொன்னேன். 


அதனை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் என்னை பயங்கரமாக விமர்சித்தனர். இந்தச் சம்பவம் நடந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் அதனை என்னால் மறக்க முடியவில்லை. அந்தச் சம்பவம் என்னை மிகவும் காயப்படுத்தியது. சிறு வயதிலிருந்தே எனக்கு போட்டி என்றாலே பயம். தனியாக பாட வேண்டும் என்றால் பயம். எல்லாரோடும் சேர்ந்து பாட பிடிக்கும். நான் நம்பர் ஒன் என்ற இடத்திற்கு வரவேண்டும் என நினைத்ததில்லை. பெரிய கதாநாயகி என்ற பெயரும்எனக்கு வேண்டாம். இப்படியே எனக்கு நன்றாக இருக்கிறது.

கிடைத்ததை வைத்து என்னால் சந்தோஷமாக இருக்க முடியும். ஏதேதோ செய்ய வேண்டும் என நினைத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவேன். பெரிய இடம் வேண்டும் என நான் எப்போதும் நினைத்ததே இல்லை. எனக்கு பிடித்ததை நல்லபடியாக செய்ய வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்ப்பேன்" என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Viveka Lyricist Interview : ’ஊ சொல்றியா மாமா ஊஹும் சொல்றியா பாடலை ஆண்கள் எதிர்க்கவில்லை, கொண்டாடுகின்றனர்’ பாடலாசிரியர் விவேகா கலகல பேட்டி..!

project K | தடபுடல் விருந்து... செம கவனிப்பு... தீபிகா படுகோனை வரவேற்ற பிரபாஸ்! - வைரலாகும் புகைப்படம்!

Rajini Birthday Photo: தனுஷ் மட்டும் மிஸ்ஸிங்... மற்றபடி தடபுடலாய் சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் விழா!

Continues below advertisement
Sponsored Links by Taboola