Netrikann | இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு? நெற்றிக்கண் வெளியாகி 15 நிமிஷத்துக்குள்ள ஹெச் டி பிரிண்ட்!

படம் வெளியாகி 15 நிமிடங்களிலேயே நெற்றிக்கண் இணையத்தில் கசிந்தது.

Continues below advertisement

நடிகை நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் இன்று வெளியானது. மூக்குத்தி அம்மன் திரைப்படத்துக்கு பின்னர் நெற்றிக்கண் படம் மூலம் மீண்டும் நயன்தாரா ஓடிடி பக்கம் சென்றுள்ளார். 'ப்ளைண்ட்' என்ற கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக வெளியாகியுள்ள இப்படத்தினை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். மேலும் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளதுடன், ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இத்திரைப்படம் ரிலீசான நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நயன்தாரா மீண்டும் ஒரு சிறப்பான திரைப்படத்தை கொடுத்திருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Continues below advertisement


இந்நிலையில் இந்த திரைப்படம் தியேட்டர் ரிலீஸ் என்றால் சிறப்பாக இருந்திருக்கும் என்ற கருத்தும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆனால் கொரோனாவால் இப்படம் ஓடிடி பக்கம் ஒதுங்கியது. இந்த நிலையில் படம் வெளியாகி 15 நிமிடங்களிலேயே நெற்றிக்கண் இணையத்தில் கசிந்தது. குறிப்பாக டெலிகிராமில் லிங்குகள் பறந்தன. தியேட்டரில் இல்லாமல் ஓடிடி ரிலீஸ் என்றாலும், இந்த பைரசிக்கு இல்லையா ஒரு முடிவு என வருத்தத்தை பதிவு செய்துள்ளனர் திரைத்துறையினர். 

சேரனின் ‛ஞாபகம் வருதே ஞாபகம் வருதே 2.0’ -ஊரை சிலாகித்து ட்விட்டர் பதிவு;

படம் வெளியாகி சில மணி நேரத்துக்குள்ளேயே ஹச்டி பிரிண்டில் லிங்குகள் வந்துவிடுகின்றன. குறிப்பாக ஓடிடி ரிலீஸ் என்றால் மிக விரைவாக பைரசியில் படம் வெளியாகிவிடுகிறது. இது திரைத்துறைக்கும், ஓடிடி நிறுவனத்துக்கும் பெரிய அச்சுறுத்தல் என்கின்றனர் திரைத்துறையினர். ஏற்கெனவே கொரோனாவால் தியேட்டர் என்ற ஒன்றே மறந்துபோய்விட்ட நிலையில் இந்த பைரசி ஓடிடியையும் திரைத்துறையையும் இன்னும் சீரழித்துவிடுமோ என புலம்புகின்றனர். 


தியேட்டர் எப்போது திறக்கும் என்பதே தெரியாத நிலையில் ஓடிடியை முழுமையாக நம்பி களம் இறங்கிவிட்டன திரைப்படங்கள். நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் நான்கு திரைப்படத்தை ஒடிடி தளத்தின் வெளியிட முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானது. இது குறித்த அறிவிப்பை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்தார். திரையரங்க வெளியீட்டிற்காக காத்திருந்த படங்களை ஒடிடியில் வெளியிடுவது என  2டி எண்டர்டைன்மெண்ட் முடிவு செய்து அது குறித்த அறிவிப்பை வெளியிட்டது.  அதன்படி  ’ஜெய்பீம்’, ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’, ‘ உடன்பிறப்பு ‘, ‘ ஓ மை டாக் ‘ உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் பெற்றுள்ளது. 

நிர்வாணமாக நடித்த ராதிகா ஆப்தே.. பழைய கதையை கிளறும் ட்விட்டர்வாசிகள்.! ஏன் தெரியுமா?

Continues below advertisement
Sponsored Links by Taboola