பார்ச்ட் திரைப்பட காட்சியில் மேலாடையின்றி நிர்வாணமாக நடிகை ராதிகா ஆப்தேவுக்கு எதிராக ட்விட்டரில் ஹேஸ்டேக் தற்போது ட்ரெண்ட்டாகி வருகிறது.
தமிழில் கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட்டில் பிரபலமானவர். அந்தாதூன், பேட்மேன், பாட்லபூர், ஸ்கேர்டு கேம்ஸ் உள்ளிட்ட பாலிவுட் படங்கள், வெப் சீரிஸ் என பல படைப்புகளில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் ஏற்கெனவே நடித்து வெளியான பார்ச்ட் திரைப்படக் காட்சியால் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். பார்ச்ட் படத்தின் ஒரு காட்சியில் மேலாடையின்றி அவர் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி பல வருடங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது ராதிகா ஆப்தேவுக்கு எதிராக ட்விட்டர்வாசிகள் ட்ரெண்டு செய்துவருகிறார்கள். அவர்களின் புகார் ராதிகா ஆப்தே ஏன், ராஜ்குந்த்ராவுக்கு எதிராக வாய்திறக்கவில்லை என்பதுதான். அதேபோல் ராஜ்குந்த்ராவை கைது செய்த போலீசார், ராதிகா ஆப்தே போன்றோரை கைது செய்யாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ராதிகாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பலரும், உத்திரபிரதேசத்தில் ஒரு இஸ்லாமியர் ஜெய்ஸ்ரீராம் சொல்லும்படி அடித்து துன்புறுத்தப்பட்டார். அந்த வீடியோ விவகாரத்தை நீர்த்துப்போக வைக்கவே சம்பந்தமே இல்லாமல் இப்போது ராதிகா ஆப்தேவை பலரும் கையில் எடுத்துள்ளனர் என கருத்து பதிவிட்டுள்ளனர்
ராதிகா ஆப்தே நடித்த அந்தக்காட்சி இந்து மத உணர்வை புண்படுத்தும் விதமாக இருப்பதாக பலரும் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து பதிவிட்டுள்ள பலரும் அவர்கள் எப்போதும் நமது கலாசாரத்து எதிராகவே உள்ளனர் என்றும், பாலிவுட் எப்போதும் இந்தியாவின் பழங்கால மதம் மற்றும் கலாசாரத்துக்கு எதிராகவே இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து #BoycottRadhikaApte #BoycottRadhikaApte உள்ளிட்ட ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
கடந்த மே மாதம் பார்ச்ட் திரைப்படம் குறித்து பேசிய ராதிகா ஆப்தே, பார்ச்ட் திரைப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் நாளிதழ் ஒன்றுக்கு பேசிய அவர், எனக்கு நிச்சயம் இதுபோல ஒரு கதாபாத்திரம் தேவைப்படுகிறது. என்னுடைய நிர்வாண காட்சி ஒன்று இணையத்தில் கசிந்த போது நான் பெரிதும் பாதிக்கப்பட்டேன். இணையத்தில் கிண்டல் செய்யப்பட்டேன். நான்கு நாட்கள் வீட்டை விட்டே வெளியே வரவில்லை. என்னுடைய ஓட்டுநர், வாட்ச்மேன் உள்ளிட்ட பலரும் என்னை அடையாளம் கண்டிருந்தனர் என்றார்.