Vijayakanth: தனது வாழ்நாளில் ஆடம்பர வாழ்வை விரும்பாத கேப்டன் விஜயகாந்த் ஒருமுறை கூட 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டதில்லை என்று நீயா, நானா நிகழ்ச்சியில் கூறப்பட்டுள்ளது. 

 

உடல் நலக்குறைவால் கடந்த 28ம் தேதி தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகை மட்டுமில்லாமல் பாமர மக்களையும் அழ வைத்தது. விஜயகாந்த் மறைவு செய்தி வெளியானதில் இருந்து இன்று வரை அவரது ஈகை குணத்தை ஒவ்வொருவரும் கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பசித்த வயிற்றுக்கு அன்னமிட்ட விஜயகாந்தின் வழியில் பலரும் அவரது பெயரில் அன்னதானம் செய்து வருகின்றனர். நடிகர்கள் சிலரும் விஜயகாந்தை போல் தினமுன் பசித்தோருக்கு அன்னதானம் வழங்க முடிவெடுத்து செயல்படுத்தி வருகின்றனர்.

 

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ள நீயா, நானா நிகழ்வு விஜயகாந்தின் நினைவுகளை கூற உள்ளது. கேப்டன் விஜயகாந்தின் நினைவை போற்றும் நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அதில், பங்கேற்ற தயாரிப்பாளர்களும், திரை கலைஞர்களும் விஜயகாந்த் என்ற மாமனிதனின் புகழை கூறி நெகிழ்ந்தனர். 

 

நீயானா, நானா நிகழ்வின் முதல் புரோமோவில், “சினிமாவில் பார்க்கும் கோபம், வெறி எல்லாம் விஜயகாந்தின் இயல்பு. சோப்பு பவுடர் விளம்பரத்திற்கு வரும் டீஷர்ட் போட்டு இருப்பார் விஜயகாந்த். அவர் தனது வாழ்நாளில் பிராண்ட் ஷர்ட் போட்டது இல்லை. லைஃபில் கடைசி வரை விஜயகாந்த் 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டது இல்லை” என்று ஒருவர் கூறுகிறார். நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசும்போது, “கூட இருப்பவர்களிடம் விஜயகாந்த் லந்து அடித்துக் கொண்டிருப்பார். விஜயகாந்த் அரந்தவால்தனம் செய்து கொண்டிருப்பார்” என்றார். 

 


 

அடுத்த புரோமோவில் பேசிய ஒரு பெண், “ இரண்டு நாட்கள் பட்டினியாக இருந்தேன். கேப்டன் சார் சாப்பாடு போட்டுட்டு இருந்தாங்கன்னு சொன்னாங்க. அதை சாப்பிட்டபோது கடவுளாக அவர் தெரிந்தார்” என கண்ணீருடன் கூறினார். மற்றொருவர், ”முகத்தில் பொய்யே இல்லாத ஒரே நடிகர் விஜயகாந்த்” என்றார். 


 

அடுத்த புரோமோவில், “மொத்த ஷூட்டிங்கிற்கும் அவர் தான் ஜிம்பாயாக இருப்பார்” என்றனர். 


 

இறுதி புரோமோவில் பேசிய பிரபலம் ஒருவர்,” கேப்டன் இறந்துட்டாருன்னு கேட்டதும் குலுங்கி குலுங்கி அழுந்தேன்” என்றார். மற்றவர்கள், “முரட்டு மனிதர்குள்ள ஒரு மலர் போன்ற வாசம் வீசு இல்ல, அது விஜயகாந்தின் வானத்தை போல” என்றார். 

 


 

இப்படி விஜயகாந்த் குறித்து அனைவரும் நெகிழ்ந்து கூறுவதை கேட்ட கோபிநாத், “அந்த மனுஷன் அவர் படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்தவர்களுக்கு மட்டும் தான் இன்னும் சாப்பாடு போடலன்னு நினைக்கிறேன்” என்றார்.