நாள்: 06.01.2024 - சனிக்கிழமை


நல்ல நேரம்:


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம்:


பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம்


திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தி உண்டாகும். நண்பர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாகும். வர்த்தகப் பணிகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றங்கள் ஏற்படும். பணிவு வேண்டிய நாள்.


ரிஷபம்


போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். இழுபறியில் இருந்துவந்த காரியங்கள் முடிவுக்கு வரும். எதிர்பாராத தனவரவு ஏற்படும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பாராட்டுகள் நிறைந்த நாள்.


மிதுனம்


புது விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உடன்பிறந்தவர்களின் மூலம் உதவி கிடைக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் நிதானமாக செயல்படவும். சோர்வுகள் குறையும் நாள்.


கடகம்


பொருளாதார நிலை மத்தியமாக இருக்கும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். சில சூழ்நிலைகள் சாதகமாக அமையும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். வேலையில் பொறுப்பு அதிகரிக்கும். உறவினர்களின் வருகை உண்டாகும். விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி ஏற்படும். நிதானம் வேண்டிய நாள். 


சிம்மம்


சிறு தூரப் பயணங்களால் மனதில் மாற்றம் ஏற்படும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும். எந்த ஒரு செயலையும் துணிச்சலோடு செய்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உயர்வான வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.


கன்னி


புதிய நட்பு மலரும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும். கூட்டாளிகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு படிப்பில் மந்தமான நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். அலைச்சல் நிறைந்த நாள்.


துலாம்


புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புடன் செயல்படவும். தொழில் நிமிர்த்தமான புதிய சிந்தனை உண்டாகும். பொன், பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


விருச்சிகம்:


குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில உதவி கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மையை தரும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் அலைச்சல் மேம்படும். கனிவு நிறைந்த நாள்.


தனுசு


உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபமுயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரம் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.


மகரம்


வியாபாரம் ரீதியாக இருந்துவந்த தடைகள் விலகும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் ஏற்படும். பாக பிரிவினைகளில் பொறுமையுடன் செயல்படவும். மனை சார்ந்த செயல்களால் ஆதாயம் உண்டாகும். எதிலும் சகிப்பு தன்மையுடன் செயல்படவும். புதிய முயற்சிகளில் தாமதம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.


கும்பம்


தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தனவருவாயில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.


மீனம்


குடும்பத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களின் வழியில் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பயனற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வீண்செலவுகளால் மனச்சஞ்சலம் ஏற்படும். செய்யும் முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். இணைய வர்த்தகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.