"நயன்தாரா எந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார். அது அவரின் தனிப்பட்ட உரிமை. வந்தே ஆகணும் என்று அவர்களை கட்டாயப்படுத்த முடியாது” என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
தனியார் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் நடிகர் விஷால் பேசியதாவது: அரசியல் என்பது சமூக சேவை. மக்களுக்கு தேவையானதை செய்வது தான் அரசியல். அதை பிசினஸாக பார்க்க கூடாது. அந்த வகையில் நான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். ஆக நான் இனிதான் அரசியலுக்கு வரவேண்டும் என்றில்லை. அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறி நடிக்கும்போது, ஒரு நடிகர் அரசியல்வாதி ஆவதில் எந்த தவறுமில்லை.
இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். சமகால இளைஞர்கள் போதைப்பொருட்களை தவிர்க்க வேண்டும். அதேபோல சமூக வலைதளங்களை பயன்படுத்துவதையும் தவிர்ப்பது நல்லது" என்றார்.
மணிப்பூர் கொடூரம் பற்றி பேசுகையில், “அரசுதான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தால் சாதி ரீதியாக வாக்கு போய்விடும் என்று நினைக்காத ஒரு முதலமைச்சர் இருந்தால்தான் அதைத் தடுக்க முடியும்” என்றார்.
நடிகை நயன்தாரா குறித்த கேள்விக்கு, ”நயன்தாரா எந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார். அது அவரின் தனிப்பட்ட உரிமை. நீங்கள் வந்தே ஆகணும் என்று அவர்களை கட்டாயப்படுத்த முடியாது”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடிகை நயன்தாரா முன்னனி கதாநாயகி ஆவார். ஐயா படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த நயன்தாரா, அதன்பின் சந்திரமுகி, பில்லா, ராஜா ராணி போன்ற ஹிட் படங்களில் நடித்து தொடர்ந்து முக்கிய நடிகைகள் பட்டியலில் நீடித்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரின் நடிப்பு திறமை மற்றும் கடின உழைப்பு நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்று கொடுத்தது. தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்திலும் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமும் இவருக்கு பெரிய அளவில் கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
“காசுக்காக இதை செய்யல” - கடின உழைப்பையும் காதல் செய்ய வைக்கும் சமோசா கடை தாத்தாவின் வைரல் மெசேஜ்