தளபதி 68: “சும்மா தெறிக்கும்” - வெங்கட்பிரபுவின் பதிலால் ட்விட்டரை அலறவிடும் விஜய் ரசிகர்கள்: என்ன நடந்தது?

விஜய்யின் தளபதி 68 படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு மாஸ் பதிலை வெங்கட் பிரபு அளித்துள்ளார்.

Continues below advertisement

 வெங்கட் பிரபுவின் அந்த ஒரு பதிவால் டிவிட்டரில் தளபதி 68 பற்றிய அறிவிப்பு டிரெண்டாகி வருகிறது. 

Continues below advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய் நடித்துள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன், திரிஷா, அஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் லியோ படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு அனிரூத் இசை அமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

லியோ படப்பிடிப்பை முடித்து கொண்ட விஜய், தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். லியோ படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தை வெங்கட்பிரபு இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விஜய்யின் தளபதி 68 படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு மாஸ் பதிலை வெங்கட் பிரபு அளித்துள்ளார்.



விஜய் படத்தின் அப்டேட் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக ‘நண்பர் ஒருவன் வந்த பிறகு’ படத்தின் அப்டேட்டை வெங்கட் பிறகு தனது விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மீசையை முறுக்கு படத்தின் ஹிப் ஆதிக்கு தம்பியாக நடித்த அனந்த் இயக்கி இருக்கும் இந்த படம் விரைவில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் குக்வித் கோமாளி பாலா, இர்ஃபான், சபரிஷ் மற்றும் ஆர்.ஜே. ஆனந்தி நடித்துள்ளனர். சென்னை 28 படத்துக்கு பிறகு நண்பர்கள் பற்றிய படமாக இந்த பாம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் அப்டேட்டை பார்த்த ரசிகர் ஒருவர் விஜய்யின் 68 படத்தின் அப்டேட் பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த வெங்கட் பிறகு ‘ T68 படத்தின் அறிவிப்பு சும்மா தெறிக்கும், காத்திருங்கள்’ என கூறியுள்ளார். வெங்கட் பிரபுவின் இந்த அறிவிப்பால் விஜய்யின் 68 படம் மாஸ் காட்டும் என ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.  

 

Continues below advertisement
Sponsored Links by Taboola