Yatra Dhanush: தன் இயக்கத்தில் மகனை அறிமுகம் செய்யும் தனுஷ்? லீக்கான ராயன் ஸ்பெஷல் அப்டேட்!


தனுஷின் 50ஆவது படமாக உருவாகியிருக்கும் படம் ராயன். இப்படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் தனுஷின் மூத்த மகன் யாத்ரா அறிமுகமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.மேலும் படிக்க


Nayanthara: விக்னேஷ் சிவனை அன்ஃபாலோ செய்த நயன்தாரா? குழப்பத்தை ஏற்படுத்தும் லேட்டஸ்ட் இன்ஸ்டா ஸ்டோரி 


இன்ஸ்டாகிராமில் கடந்த ஆண்டு தான் தன்னுடைய அக்கவுன்ட்டைத் தொடங்கினார் நயன். தொடங்கிய உடனே அவருக்கு லட்சக்கணக்கான பாலோவர்கள் குவிந்தனர். தனது கணவர், குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து லைக்ஸ்களை குவித்து விடுவார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ஷேர் செய்யும் அனைத்து போஸ்ட்களும் சோசியல் மீடியாவில் உடனே வைரலாகி வரும். 


இந்நிலையில் தான் நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனை அன்ஃபாலோ (Unfollow) செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.மேலும் படிக்க


Manjummel Boys: “கமல்ஹாசன் கண்கலங்கிட்டார்” - மஞ்சும்மல் பாய்ஸ் குறித்து குணா இயக்குநர் சந்தான பாரதி!


குணா படத்தை இயக்கிய  நடிகர் மற்றும் இயக்குநர் சந்தான பாரதி படம் குறித்து பேசியுள்ளார். இந்தப் படத்தை திரையரங்கில் பார்த்தபோது கண்மணி அன்போடு பாடலுக்கு திரையரங்கத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் ஆர்பரித்ததாக சந்தான பாரதி கூறியுள்ளார். படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை பார்த்து தனது புல்லரித்துப் போனதாகவும் தான் கண்கலங்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் படம் பார்த்த கமல்ஹாசனுன் கண்கள் கலங்கி அமர்ந்திருந்ததாக சந்தான பாரதி தெரிவித்துள்ளார். மேலும் படிக்க


Samantha: இட்லி, தோசை இல்ல.. சாயர்கிராட்: உடல் ஆரோக்கியத்துக்காக சமந்தா உண்ணும் முட்டைகோஸ் ரெசிபி!


முட்டை கோஸை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படும் சாயர்க்ராட் என்கிற ஐரோப்பிய உணவை சமந்தா தனது காலை உணவாக எடுத்துக் கொள்கிறார். உணவு செரிமானத்திற்கு தேவையான ப்ரோ பையோட்டிக் மற்றும் ப்ரீ பையோட்டிக் ஆகிய இருவகை பாக்டீரியாக்களும் இந்த உணவில் இருக்கின்றன.மேலும் படிக்க


Venkat Prabhu : வம்பிழுத்த விஜய் ஃபேன்ஸ்: டென்ஷனாகி அப்டேட் தர மறுத்த வெங்கட் பிரபு


கடந்த வாரம் ரசிகர் ஒருவர் கோட் படத்தின் முதல் பாடலை வெளியிட வாய்ப்பிருக்கிறதா என்று எக்ஸ் தளத்தில் கேட்டிருந்தார். இதற்கு படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு  'To Early ' என்று பதிலளித்திருந்தார். வெங்கட் பிரபு இதை சொல்லி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் ஒருவர் ’சொல்லியே ஒரு வாரம் ஆச்சு’ என்று வெங்கட் பிரபுவை ஆபாசமாக திட்டி அப்டேட் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு “ நானே சொல்லலாம்னுதான் இருந்தேன் , இப்போ இதுக்கு மேல எப்டி சொல்றது நீங்களே சொல்லுங்க” என்று கோபத்தை கட்டுப்படுத்தி  கூலாக பதிவிட்டுள்ளார்.மேலும் படிக்க