தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் நயன்தாரா (Actress Nayanthara) முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்கிறார். ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து அங்கும் கலக்கி விட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஒரு பான் இந்தியன் நடிகையாக முன்னேறிய நயன்தாரா தன்னுடைய கேரியரில் மிகவும் ஸ்ட்ராங் லேடியாக கலக்கி வரும் அதே வேளையில், அவரின் பர்சனல் லைஃப்பும் மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்து வருகிறது. காதல் கணவர்,அழகான இரு மகன்கள் என மிகவும் சந்தோஷமாக நகர்த்தி வரும் நயன்தாரா குறித்த வதந்தி ஒன்று லேட்டஸ்ட்டாக சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 


 



 


இயக்குநர், தயாரிப்பாளர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள ஷெர்டன் கிராண்ட் ரிசார்ட்டில் மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்தத் திருமண விழாவில் ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்தத் தம்பதியினர் உயிர், உலக் என இரட்டை ஆண் குழந்தைகளை வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்தனர். திருமணமான நான்கே மாதங்களில் குழந்தை பிறந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பின்னர் ஓய்ந்தது. 


இன்ஸ்டாகிராமில் கடந்த ஆண்டு தான் தன்னுடைய அக்கவுன்ட்டைத் தொடங்கினார் நயன். தொடங்கிய உடனே அவருக்கு லட்சக்கணக்கான பாலோவர்கள் குவிந்தனர். தனது கணவர், குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து லைக்ஸ்களை குவித்து விடுவார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ஷேர் செய்யும் அனைத்து போஸ்ட்களும் சோசியல் மீடியாவில் உடனே வைரலாகி வரும். 


இந்நிலையில் தான் நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனை அன்ஃபாலோ (Unfollow) செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. கூடுதலாக நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மறைமுகமாக போஸ்ட் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். "எனக்கு இது கிடைத்தது" என்று தான், கண்ணீருடன் அவள் எப்போதும் சொல்லப் போகிறாள்" என போஸ்ட் செய்துள்ளார். இந்த ஸ்டோரியை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையில் எல்லாம் சுமுகமாக தான் இருக்கிறதா? அல்லது அவர்கள் இருவருக்கும் இடையிலும் ஏதாவது பிரச்சினையா? என கேள்வி மேல் கேள்விகளை அடுக்கி வருகிறார்கள். 


 



மேலும் இவர்கள் இருவரின் புகைப்படங்கள் அனைத்தும் நயனின் இன்ஸ்டாகிராம் பேஜில் அப்படியே தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.