Iraivan Trailer: ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தின் டிரெய்லரை மட்டுமே இன்ஸ்டர்கிராமில் வெளியிட்ட நயன்தாரா இறைவன் படத்தை கண்டுக்காமல் இருப்பதாக எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படத்தில் ஜோடியாக நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார். பிரமாண்டமாக பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் ஜவான் படம் வரும் 7ம் தேதி ரிலீசாக உள்ளது. இதையொட்டி சென்னையில் அண்மையில் நடந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் ஷாருக்கான், விஜய்சேதுபதி, அனிருத், அட்லீ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அடுத்த நாள் வெளியான படத்தின் டிரெய்லர் ரசிகர்களை பிரமிக்க வைத்தது. அதேநேரம், புதிதாக இன்ஸ்டகிராம் கணக்கை தொடங்கிய நயன்தாரா, ஜவான் படத்தின் டிரெய்லரை பகிர்ந்திருந்தார். ஒரே நாளில் மில்லியன் பாலோவர்ஸை நயன்தாரா பெற்ற நிலையில்  ஜவான் படத்தின் டிரெய்லருக்கும் பெரிய அளவில் புரோமோஷன் கிடைத்தது. 

இதற்கிடையே, இன்றைய தினம் (செப்டம்பர் 3) அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல்போஸ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இறைவன் படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க கிரைம் திரில்லரை கொண்ட கதையில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அடுத்தத்து நடைபெறும் பெண்களின் கொலையும், அதை செய்யும் ஸ்மைல் கில்லரும் படத்தின் டிரெய்லரின் மிரட்டுகின்றனர். ரத்தம், கண்ணீர், அழுகை, பயம், கொலை என சிலிர்ப்பூட்டும் டிரெய்லரால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. 

பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியில் வெளியாக இருக்கும் படம் என்பதால் இறைவன் படத்தின் மீது விறுவிறுப்பு அதிகரித்துள்ளது. இதில் ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் இறைவன் படத்தின் டிரெய்லரை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளவில்லை என இணையவாசிகள் சிலர் கருத்து கூறி வருகின்றனர். முன்னதாக நயன்தாரா ஜவான் டிரெய்லரை மட்டும் பகிர்ந்து விட்டு இப்படி இறைவன் பட டிரெய்லரை பகிராமல் இருப்பது ஏன் எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

மேலும் படிக்க: Iraivan Trailer: ஒன் டூ த்ரீ.. முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் சைக்கோ த்ரில்லர்.. ஜெயம் ரவியின் ‘இறைவன்’ ட்ரெய்லர் வெளியீடு!

Kushi Box Office: அமர்க்களமான ஓப்பனிங்.. சமந்தா - விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' 2 நாள்கள் வசூல் இவ்வளவா?