National Film Awards 2022 LIVE: 68வது தேசிய திரைப்பட விருதுகளில் வாகையை சூடிய சூரரைப் போற்று..!
National Film Awards: 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2020 ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம்தேதிகளுக்குள் சான்றிதழ் பெற்ற திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது மண்டேலா படத்திற்காக இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
68-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைக்கதைக்கான விருது சூரரைப் போற்று படத்திற்காக சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் வென்றனர்.
சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் படத்திற்காக, சிறந்த துணை நடிகைக்கான விருதினை லட்சுமி பிரியா சந்திரமெளலி வென்றார்.
சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் படத்திற்காக, சிறந்த படத்தொகுப்பாளர் விருதினை ஸ்ரீகர் பிரசாத் வென்றார்.
நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று 5 தேசிய விருதுகளை குவித்துள்ளது.
68-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த வசனதிற்கான விருதினை பெற்றது மண்டேலா
அல வைகுந்தபுரமுலோ படத்திற்காக தமனுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிப்பு.
சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்த நடிகை அபர்ணா பாலமுரளிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது.
68- வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த நடிகருக்கான விருதினை சூர்யா மற்றும் அஜய் தேவ்கன் வென்றனர்.
68- வது தேசிய திரைப்பட விருதுகளில், சூரரைப் போற்று படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதினை பெற்றது
சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருதினை ஜி.வி.பிரகாஷ் வென்றுள்ளார்.
68- வது தேசிய திரைப்பட விருதுகளில், சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதினை பெற்றது
சிறந்த இசைக்கான விருது-விஷால் பரத்வாஜ். சிறந்த படத்தொகுப்புக்கான விருது - ஆனந்தி.
திரைப்படங்கள் எடுக்க மிகவும் உகந்த மாநிலமாக மத்திய பிரதேசம் அறிவிப்பு
2020 ஆம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், பாடகர் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் அறிவிப்பு
5 பிரிவுகளின் கீழ் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன. 2020 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலக்கட்டத்தில்
வெளியாகி சென்சார் பெற்ற படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்படுகிறது.
Background
National Film Awards: 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2020 ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம்தேதிகளுக்குள் சான்றிதழ் பெற்ற திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படத்திற்கு விருதுகள் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -