'என்ன விலை அழகே...' என்று அவருக்காகவே எழுதியது போல் ஒரு தமிழ் பாடலில் அழகுப் பதுமையாக உலா வந்தவர் சோனாலி பிந்த்ரே.


1994ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி, பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய, வட இந்திய சினிமாக்களில் முன்னணி நடிகையாக சோனாலி பிந்த்ரே வலம் வந்தார்.





பின்னர் பட வாய்ப்புகள் சரிந்து 2002ஆம் ஆண்டு தயாரிப்பாளரும் இயக்குநருமான கோல்டி பெஹல்லை திருமணம் செய்து இல்லற வாழ்கையில் இணைந்தார்.  இந்தத் தம்பதியினருக்கு 2005 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த சோனாலி பிந்த்ரே, இந்தி தொலைக்காட்சிகளின் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும், வெப் சீரிஸ்களில் நடித்தும் வருகிறார்.




இந்நிலையில், நாகினி புகழ் நடிகை மௌனி ராய் தான் சோனாலியை கட்டித்தழுவி முத்தமிடும் புகைப்படம் ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் இவர்கள் இருவரது ரசிகர்களையும் மகிழ்வித்துள்ளது. 


அண்டர்வேர்ல்டு மாஃபியா ஆதிக்கம்


முன்னதாக, பாலிவுட்டில் ஒரு கட்டத்தில் தான் எவ்வாறு பட வாய்ப்புகளை இழந்தேன் என்பது குறித்து சோனாலி பிந்த்ரே பேசி உள்ளார்.


பாலிவுட்டில் 90கள் தொடங்கி அண்டர் வேர்ல்டு மாஃபியா ஆட்களின் ஆதிக்கம் அதிகம் எனக் கூறப்படும் நிலையில், தன்னை பல இயக்குநர்களும் முன்வந்து படத்தில் கமிட் செய்தும், மாஃபியா ஆட்கள் கொடுத்த அழுத்தத்தால் வேறு நடிகைகளுக்கு அந்த வாய்ப்பு சென்றதாக சோனாலி முன்னதாகத் தெரிவித்துள்ளார். 


புற்றுநோயுடன் போராடி வெற்றி






சோனாலியின் வாழ்வை புற்றுநோய் புரட்டிப் போட்டதைத் தொடர்ந்து வெற்றிகரமாக அதிலிருந்து மீண்டெழுந்து வந்த அவர், தொடர்ந்து தான் மீண்டெழுந்தது குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசி பலரையும் ஊக்குவித்து வருகிறார்.


மேலும் படிக்க..


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்