இந்த வாரத்தின் வெள்ளிக்கிழமையில் வெளியான இப்படத்தை, பார்த்த ரசிகர்கள், கலவையான விமர்சனத்தை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அமெரிக்காவில் திரையிடப்பட்ட ப்ரீமியர் ஷோவில், இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்கள், “பழைய வடிவேலு மீண்டும் வந்துவிட்டார்” என்ற பாசிட்டிவான விமர்சனங்களை முன் எடுத்து வைக்கின்றனர்.
விமர்சகர்கள் சிலர், இப்படத்தில் வடிவேலுதான் முக்கிய தூணாக அமைந்து இருக்கிறார். பழைய வடிவேலுவை மீண்டும் கொண்டு வர இயக்குநர் முயற்சி செய்துள்ளார் ஆனால், அது வொர்க்-அவுட்டாகவில்லை என்று பதிவிட்டுள்ளனர். மக்கள் தொடர்பாளர்களிடம் இருந்து வரும் விமர்சனங்களை விட, பொது மக்கள் கூறும் கருத்துக்களே நியாமாகவும் உண்மையாகவும் இருக்கும். அப்படி பார்த்தால், நாய் சேகர் படம், காமெடியாக இருப்பதாகவும் குடும்பத்துடன் பார்க்கலாம் என்றும் குழந்தைகளுக்கும் இப்படம் பிடிக்கும் என்றும் கூறிவருகின்றனர். அத்துடன் சந்தோஷ் நாராயணின் இசை பிரமாதமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இப்படியாக காலை முதல் பல விமர்சனங்கள் வந்த பின்னர், பயங்கர நெகடிவ்வான கருத்துக்கள் தற்போது பரவிவருகிறது. பொதுவாக, ஒரு படம் மொக்கையாக இருந்தால் நடிகர் வடிவேலுவின் பிரபலமான காமெடி காட்சிகளைதான் மீம்ஸ்களின் டெம்ப்ளேட்டாகவோ, அல்லது ட்ரால் வீடியோவின் டெம்ப்ளேட்டாகவோ பயன்படுத்துவர். ஆனால், வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு, அவரின் டெம்ப்ளேட்டை பயன்படுத்தும் அளவிற்கு அப்படமானது படு மோசமாக உள்ளது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மற்றொரு பக்கம், படத்தில் காமெடி எங்கே.. இது க்ரிஞ் படம் என்றும், சாவு பயத்தை காட்டி விட்டாங்க பரமா என்றும் வடிவேலுவை வைத்து இன்னும் கூட சிறப்பான படத்தை எடுத்து இருக்கலாம் என்றும் எப்போதுதான் வடிவேல் சரியான கம்-பேக் கொடுப்பார் என அவர்களின் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க : Naai Sekar Returns Review: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.. 3 தடவ திரும்பி பார்க்கலாமா? போத்திகிட்டு தூங்கலாமா? - வாவ் ரிவ்யூ உங்களுக்காக...!