Vidyasagar: பாடல்களால் மனதை வருடியவர்! தமிழ் ரசிகர்களுக்காக மீண்டும் களமிறங்கும் வித்யாசாகர்: எந்தப் படம் தெரியுமா?

Vidyasagar: மலையாளம், தெலுங்கு சினிமாக்களில் பணியாற்றி வந்த வித்யாசாகர், தமிழில் தனக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்.

Continues below advertisement
Vidyasagar: ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, அன்பே சிவம், சந்திரமுகி என ஹிட் படங்களுக்கு இசையமைத்து தமிழ் ரசிகர்களால் என்றும் கொண்டாடப்பட்டு வரும் இசையமைப்பாளராக இருந்து வரும் வித்யாசாகர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தேசிங்கு ராஜா-2 படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 
 
ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் வித்யாசாகர். பாரம்பரிய இசை குடும்பத்தில் பிறந்த இவர் தனது 14 வயதிலேயே விப்ரோபோன், பியானோ, கிடார், கீபோர்டு, ஆர்மோனியம் உள்ளிட்ட இசைக் கருவிகளை பயன்படுத்த தெரிந்துக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து எம்.எஸ்.வி முதல் இளையராஜா வரை முன்னணி இசைக் கலைஞர்களுடன் பணியாற்றிய வித்யாசாகர் இசை உலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டார். மியூசிக் டைரக்டராக வலம் வரும் வித்யாசாகர் முதன் முதலில் 1989ம் ஆண்டு வெளிவந்த பூமனம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். 
 
தொடர்ந்து 1994ம் ஆண்டு வெளிவந்த ஜெய்ஹிந்த் படத்திற்கு இசையமைத்த இவர், தொடர்ந்து அர்ஜூன் நடித்த கர்ணா, செங்கோட்டை, ஆயுத பூஜை, சுபாஷ், தாயின் மணிக்கொடி உள்ளிட்ட தேசபக்தி மிகுந்த படங்களுக்கு இசையமைத்து அசத்தினார். எனினும், தமிழில் சரியான வெற்றிக் கிடைக்காததால், மலையாளம், தெலுங்கு பக்கம் தனது கவனத்தை திருப்பினார் வித்யாசாகர். 
 
தொடர்ந்து பிற மொழிகளில் இசையமைத்து இருந்தாலும், தமிழில் விஜய், அஜித், விக்ரம், மாதவன், ஜீவா, ஷாம், கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் நடத்த படங்களில் வித்யாசாகரின் இசை மாயாஜாலத்தை செய்துள்ளது. அதில் குறிப்பாக விஜ்யாசாகர்-தரணி காம்போ தமிழ் சினிமா வரலாற்றில் வெற்றிப் பாடல்களை கொடுக்க உதவியது. குறிப்பாக விக்ரம் நடித்த தில், தூள், படத்தின் பாடல்களும், விஜய் நடித்த கில்லி படத்தின் பாடல்களும் ரசிகர்களை கொண்டாட வைத்தது. இதேபோல், கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த அன்பே சிவம் படத்தின் பாடல்களும் இசையும் கொண்டாட வைத்தது. 
 
தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளிவந்த படையப்பா படத்திலும், சந்திரமுகி படத்திலும் இசையில் வித்யாசாகர் செய்த மாயாஜாலம் ரசிகர்களை இன்றும் ஈர்க்கிறது. மொழி, இயற்கை, குருவி உள்ளிட்ட படங்களில் இசையமைத்து ரசிகர்களை ஆறுதலாக வருடிய வித்யாசாகர் சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். 
 
இந்த நிலையில், சிறு இடைவெளிக்குப் பிறகு வித்யாசாகர் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்க உள்ளார். விமல் நடிப்பில் தயாராக இருக்கும் ‘தேசிங்கு ராஜா 2’ படத்தில் இசையமைப்பாளராக வித்யாசாகர் கமிட்டாகி உள்ளார். படத்தை இயக்குநர் எழில் இயக்குகிறார். பூஜிதா பொனாடா மற்றும் ஹர்ஷிதா ஹீரோயின்களாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். படத்தில் விமலுடன் இணைந்து ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம்புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். 
 
 
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola