Prashanth: GOAT தந்த உற்சாகம்! அடுத்தடுத்த படங்களில் கமிட்! மிரட்டலான கம்பேக் தருவாரா பிரசாந்த்?

Prashanth : டாப் ஸ்டார் பிரஷாந்த், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'GOAT' படம் மூலம் சிறப்பாக கம்பேக் கொடுப்பதுடன் அடுத்தடுத்த படங்களிலும் கமிட்டாகி உள்ளார்.   

Continues below advertisement

ஒரு மருத்துவராக தன்னுடைய இலக்கை நிர்ணயம் செய்து வைத்திருந்தவருக்கு எதேச்சையாக கிடைத்த வாய்ப்பு மூலம் அவரின் மொத்த பயணமுமே திசை மாறி தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு நடிகராக உருவெடுத்தார்.  அவர் தான் டாப் ஸ்டார் பிரஷாந்த். 'வைகாசி பொறந்தாச்சு' திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகர் பிரஷாந்த் தமிழ் சினிமாவில் ஒரு ஆணழகனாக கொண்டாடப்பட்டார். 

Continues below advertisement

 

பேக் டு பேக் ஹிட்:

செம்பருத்தி, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, மஜ்னு, அப்பு, வின்னர் என பேக் டு பேக் ஹிட் படங்களாக நடித்து உட்சபட்ச நடிகராக திகழ்ந்து வந்தார். ஒரு காலகட்டத்தில் அடுத்தடுத்த படங்கள் பெரிய அளவு வரவேற்பு பெறாததால் சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகர் பிரஷாந்த் தற்போது மீண்டும் கம் பேக் கொடுத்து இருப்பது அவரின் டை ஹார்ட் ரசிகர்களுக்கு மிக பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

ஹைப் ஏற்படுத்திய GOAT போஸ்டர் :

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (GOAT). ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகர்  விஜய்யுடன் நடிகர் பிரஷாந்த், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். 

 


GOAT படத்தின் போஸ்டர் ஒன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. அந்த போஸ்டரில் நடிகர் விஜய்யுடன் பிரஷாந்த், அஜ்மல்,  மற்றும் பிரபுதேவா இருப்பது போல வெளியாகி இருந்தது. அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பல ஆண்டுகளாக நடிகர் பிரஷாந்த் படங்கள் வெளியாகாததால் மிகுந்த வருத்தத்தில் இருந்த அவர்களது ரசிகர்கள் GOAT படத்தின் போஸ்டரில்  அவரை பார்த்ததும் உற்சாகம் அடைந்தனர். இடைப்பட்ட காலத்தில் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் 'அந்தகன்' படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் அப்படத்தின் ரிலீஸ் சற்று காலதாமதமாகிறது என கூறப்படுகிறது. 

விஜய்க்கு டஃப் கொடுக்கும் பிரஷாந்த் :

GOAT படத்தின் போஸ்ட்டரை பார்க்கும் போது அவர் நடிகர் விஜய் நண்பர்களில் ஒருவராக நடித்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலில் நடிகர் விஜய்க்கு டஃப் கொடுக்கும் வகையில் பிரஷாந்த் கலக்கலாக டான்ஸ் ஆடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி மேலும் ஆர்வத்தை அதிகரித்து ஹைப் ஏற்படுத்தியுள்ளது.

குட் நியூஸ் :

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை கொடுத்துவிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு திரும்புகையில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது GOAT படம் குறித்து அவர் கூறுகையில் படப்பிடிப்பு பிரமாதமாக செல்வதாக தெரிவித்து இருந்தார். மேலும் அவரின் ரசிகர்களுக்கு பூஸ்ட் கொடுக்கும் வகையில் சர்ப்ரைஸ் தகவலாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி உள்ளார் என்பதையும் தெரிவித்து இருந்தார் நடிகர் பிரஷாந்த். 

Continues below advertisement
Sponsored Links by Taboola