தீபிகா படுகோன் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் பல முறை தான் ஒரு நல்ல மனிதர் என்பதையும் நிரூபித்திருக்கிறார். அப்படியான சில தருணங்களைப் பார்க்கலாம்.



  1. ஜேஎன்யூ மாணவர்களுடன் நின்ற தருணம்


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது அரசு வன்முறையை அவிழ்த்துவிட்டபோது அவர்களை நேரில் சென்று பார்த்தார் தீபிகா. எந்த உரைகளும் பேச்சுகளும் இன்றி, அமைதியாக அவர்களுடன் அன்று நின்றார்.



  1. கெஹராயியான் சர்ச்சைகள்


அவருடைய கணவரான ரன்வீரின் அனுமதியுடன் தான் தீபிகா நெருக்கமான காட்சிகளில் நடித்தாரா என்ற கேள்வி எழும்பியபோது, ‘என்ன முட்டாள்தனமான பேச்சு இது?’ என்ற ஒரே வாக்கியத்தில் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.




  1. மார்பகங்கள் உடைமைப் பொருளாக்கப்படுதல்


அவருடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்ட இதழ் ஒன்று, அதற்கு தீபிகாவின் மார்பகம் என்று தலைப்பிட்டபோது, உடனடியாக அந்த பதிவை ரீட்வீட் செய்து, ‘ஆமாம் நான் பெண் தான், எனக்கு மார்பகம் இருக்கிறது, உங்களுக்கு அதிலேனும் பிரச்சனை இருக்கிறதா?’ என்று கேட்டிருந்தார்.



  1. ‘அது எனது பணம்’


இவரது தயாரிப்பில் சாப்பக் திரைப்படம் வெளியான சமயம், ‘ரன்வீர் இந்த படத்தைத் தயாரிக்க பணம் கொடுத்தாரா?’ என்று கேள்வி கேட்டபோது, அந்த கேள்வியை முடிக்கும் முன்பாகவே, ‘ஹலோ! அது எனது பணம்!’ என்று பதிலளித்தார்.



  1. மனநல ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு


எதிர்பாராத நேரத்தில் தீபிகா மன உளைச்சலுக்கு ஆளானபோது, இந்தியாவில் மனநல ஆரோக்கியம் குறித்த பார்வை எவ்வளவு குறைபட்டிருக்கிறது என்பதை உணர்ந்தார். சிகிச்சைக்குப் பின், அவர் செய்த முதல் காரியம் தனது மனநல சிக்கலைக் குறித்து வெளிப்படையாகப் பேசியதும், மனநல ஆரோக்கியத்திற்கான அமைப்பு ஒன்றை நிறுவியதும்தான்.


பெண்ணுரிமைக்கான விஷயங்களைப் பொதுவெளியில் பேசியதும், பாலிவுட்டில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே ஆன சம்பள வித்தியாசங்களை முதன்முறையாக கேள்வி எழுப்பியதும் இவர்தான்.  


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்