தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்த மேக்னா ராஜ் தமிழில் 2010ம் ஆண்டு வெளியான 'காதல் சொல்ல வந்தேன்' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்த மேக்னா ராஜ் பல மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். 


சோகத்தில் முடிந்த திருமண வாழ்க்கை : 


கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா உடன் இணைந்து மேக்னா ராஜ் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம் அவர்கள் இருவருக்கும் இடையில்  ஏற்பட்ட நட்பு காதலாக மாறி 10 ஆண்டுகள் டேட்டிங் செய்த பிறகு இருவரும் 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மிகவும் சந்தோஷமாக பயணித்த அவர்களின் திருமண வாழ்க்கை 2 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிரஞ்சீவி சர்ஜா 2020ம் ஆண்டு உயிரிழந்தார். கணவரை பறி கொடுக்கும் போது மேக்னா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். ஒட்டுமொத்த திரையுலகிற்கும் அவரின் மறைவு  பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. 


 



ராயனின் முதல் அடி:


இதனைத் தொடர்ந்து மேக்னாவிற்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அவனுக்கு ராயன் ராஜ் சர்ஜா என பெயரிட்டு செல்லமாக வளர்த்து வருகிறார். அந்த வகையில் மகன் முதல் முறையாக பள்ளிக்கு செல்லும் தருணத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிந்துள்ளார். குழந்தையுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 


" நாம் பெற்றோராகிவிட்டால், குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோராக நாமும் மைல்கற்களைக் கடக்கிறோம். இந்த நாள் அப்படிப்பட்ட சிறப்பான நாளாக இருக்கும்!


ராயனின் பள்ளியின் முதல் நாள்! நான் கடந்து வந்த உணர்வுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது... கல்வி, அறிவு மற்றும் மிக முக்கியமாக வாழ்க்கைப் பாடங்களை நோக்கிய அவரது முதல் படி " என்ற ஒரு பதிவை பகிர்ந்து குழந்தையை ஆசீர்வதியுங்கள் என ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார் மேக்னா ராஜ். கமெண்ட் மூலம் அவரின் ரசிகர்கள் குழந்தையை வாழ்த்தி வருகிறார்கள். 


சினிமாவில் ரீ என்ட்ரி :


குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக சிறிது காலம் சினிமாவில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட மேக்னா ராஜ் தற்போது பன்னகா பரனா தயாரிப்பில் 'தட்சமா தத்பவ' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த விவர ம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: Regina Teaser: லிப் கிஸ், கையில் சிகரெட்... எதிர்பார்ப்புகளை எகிறவைக்கும் சுனைனாவின் ‘ரெஜினா’ பட டீசர்..!